தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
"ஒலிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை மறுஆய்வு செய்தல்" குறித்த டிராய் ஆலோசனை அறிக்கை மீதான கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி நீட்டிப்பு
प्रविष्टि तिथि:
03 OCT 2023 6:02PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆகஸ்ட் 08 அன்று "ஒலிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பின் மறுஆய்வு" குறித்த ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது. கலந்தாய்வில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி முதலில் செப்டம்பர் 05, 2023 ஆகவும், எதிர் கருத்துகளை பெறுவதற்கு செப்டம்பர் 19, 2023 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் காரணமாக, எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி முறையே செப்டம்பர் 19 மற்றும் அக்டோபர் 3 வரை நீட்டிக்கப்பட்டது.
பின்னர், பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி முறையே அக்டோபர் 3, 2023 மற்றும் அக்டோபர் 17, 2023 வரை நீட்டிக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட ஆலோசனைப் பத்திரத்தில் கருத்துரைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை முறையே அக்டோபர் 10, 2023 மற்றும் அக்டோபர் 25, 2023 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கருத்துக்கள் / எதிர் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்கக் கோரும் எந்தக் கோரிக்கையும் ஏற்கப்படமாட்டாது.
கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகள் மின்னணு வடிவில், மின்னஞ்சல் ஐடி advbcs-2@trai.gov.in மற்றும் jtadvbcs-1@trai.gov.in அனுப்பப்படலாம். ஏதேனும் விளக்கம் / தகவல்களுக்கு, டிராய் சிஎஸ்ஆர் இயக்குநர் ஜெனரல் மற்றும் ஆலோசகர் (பி & சிஎஸ்) திரு அனில் குமார் பரத்வாஜை கீழ்க்காணும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். +91-11-23237922.
ANU/AD/PKV/KRS
(रिलीज़ आईडी: 1963871)
आगंतुक पटल : 142