பாதுகாப்பு அமைச்சகம்

வைஸ் அட்மிரல் தருண் சோப்தி கடற்படையின் துணைத் தளபதியாக பொறுப்பேற்றார்

Posted On: 01 OCT 2023 11:04AM by PIB Chennai

வைஸ் அட்மிரல் தருண் சோப்தி கடற்படையின் துணைத் தளபதியாக 01 அக்டோபர் 23 அன்று பொறுப்பேற்றார்.

வைஸ் அட்மிரல் தருண் சோப்தி ஜூலை 01, 88 அன்று இந்திய கடற்படையில் நியமிக்கப்பட்டார்.

தனது 35 ஆண்டுகளுக்கும் மேலான பணியில் , அவர் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். ஐ.என்.எஸ் நிஷாங்க்,  ஐ.என்.எஸ் கோராஏவுகணை கார்வெட் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பு கப்பல் ஐ.என்.எஸ் கொல்கத்தா ஆகியவற்றிற்கு அவர் தலைமை தாங்கினார். மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் கடற்படை இணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் ரியர் அட்மிரல் பதவிக்கு பதவி உயர்வு பெற்ற பின்னர், அவர் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் துணை கமாண்டன்ட் மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளராகவும், பின்னர் கிழக்கு கடற்படையின் கொடி அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.  2021 ஆம் ஆண்டில் வைஸ் அட்மிரல் நிலைக்கு உயர்த்தப்பட்ட பின்னர், அவர் என்.எச்.க்யூவில் கடற்படை துணை தலைமைத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு  கடற்பறவை திட்ட தலைமை இயக்குநராகப்  பொறுப்பேற்றார்.

 2020 ஆம் ஆண்டில் விசிஷ்ட் சேவா பதக்கமும், 2022 ஆம் ஆண்டில் அதி விசிஷ்ட் சேவா பதக்கமும் இந்திய குடியரசுத் தலைவரால்  இவருக்கு வழங்கப்பட்டது.

38 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற சேவையின் பின்னர் 2023 செப்டம்பர் 30 அன்று ஓய்வு பெற்ற வைஸ் அட்மிரல் சஞ்சய் மஹிந்தருவுக்குப் பிறகு அவர் இந்தப் பதவியை ஏற்றுள்ளார்.  சஞ்சய் மஹிந்த்ரு பதவி வகித்த காலத்தில், இந்திய கடற்படை பல குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கண்டது, இது இந்தியாவின் கடல் எல்லை மற்றும் செயல்பாட்டு வேகத்தை உயர்த்தியது, அத்துடன் நட்பு நாடுகளுடன் பல வெற்றிகரமான பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்முயற்சிகளையும் கண்டது.

***

ANU/AP/PKV/DL



(Release ID: 1962712) Visitor Counter : 105