சுற்றுலா அமைச்சகம்

சுற்றுலா அமைச்சகம் அக்டோபர் 4-ம் தேதி முதல் புதுதில்லியில் பசிபிக் ஆசியா பயணச் சங்கத்தின் இந்த ஆண்டுக்கான கண்காட்சியை நடத்துகிறது

Posted On: 30 SEP 2023 12:14PM by PIB Chennai

பசிபிக் ஆசியா பயணச் சங்கமான பசிபிக் ஆசியா டிராவல் அசோசியேஷன் (பாட்டா), டிராவல் மார்ட் 2023 எனப்படும் 46- வது கண்காட்சியை புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் (ஐ.இ.சி.சி) இந்தியா நடத்தவுள்ளதாக சுற்றுலா அமைச்சகம் அறி்வித்துள்ளது.  

உலகெங்கிலும் உள்ள சுற்றுலா வல்லுநர்கள் மற்றும் இந்த தொழில் துறையினரை ஒருங்கிணைக்கும் இந்தப் பயணச் சந்தை மற்றும் கண்காட்சி2023 அக்டோபர் 4 முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கொவிட் தொற்று பாதிப்புக் காரணமாக மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு டிராவல் மார்ட் எனப்படும் இந்தப் பயணச் சந்தை நேரடியாக நடத்தப்படுகிறது.

1951 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பசிபிக் ஆசிய பயண சங்கம் (பாட்டா) பாங்காக்கை தலைமையிடமாகக் கொண்டு, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகிறது.  இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற லாப நோக்கற்ற அமைப்பாகும். பாட்டா டிராவல் மார்ட் என்பது சுற்றுலாத் துறைக்கு சேவை செய்யும் முக்கியமான சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் ஒன்றாகும். மேலும் இது பெரும்பாலும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த உலகளாவிய சுற்றுலா வர்த்தகம் தொடர்பான தொடர்புகளுக்கான தளமாக செயல்படுகிறது.

***

ANU/AP/PLM/DL



(Release ID: 1962367) Visitor Counter : 77