தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழா 2023- ல் இந்தியக் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார்
Posted On:
30 SEP 2023 11:56AM by PIB Chennai
செப்டம்பர் 29 அன்று நடைபெற்ற 15 வது தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவின் (டி.ஐ.எஃப்.எஃப்) தொடக்க விழாவில் இந்தியாவின் சார்பாக தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டார். இந்தியக் குழுவில் மூத்த திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான திரு உமேஷ் மெஹ்ரா மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக (என்.எஃப்.டி.சி) அதிகாரிகள் உள்ளனர். இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் சோவியத் யூனியன் காலத்தில் இருந்து, திரைப்படத் தயாரிப்பில் வலுவான ஒத்துழைப்புப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. என்.எஃப்.டி.சி மற்றும் உஸ்பெகிஸ்தான் கினோ (உஸ்பெக் பிலிம்ஸ்) ஆகியவற்றின் கூட்டு செயல்பாடுகளால் இந்த ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, உஸ்பெகிஸ்தான் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஒசோத்பெக் நாசர்பெகோவை அமைச்சர் முருகன் சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்பு மற்றும் ஒத்துழைப்பை இரு தரப்பினரும் குறிப்பிட்டனர். மேலும் திரைப்படத் தயாரிப்பு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் இந்தியாவின் ஆக்கபூர்வமான பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான இந்திய அரசின் வலுவான கொள்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தியாவின் ஆடியோ-விஷுவல் துறையில் காணப்படும் மகத்தான வளர்ச்சி குறித்து திரு முருகன் உஸ்பெகிஸ்தான் தரப்பிற்கு விளக்கினார். கூட்டுத் தயாரிப்பு, படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புக்குப் பிந்தையப் பணிகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த திரைப்படத் துறையினர் மற்றும் மாணவர்களுக்கு இந்தியத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களில் பயிற்சி அளிக்க இந்தியா தயாராக உள்ளது என இந்தச் சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டது.
தாஷ்கண்ட் திரைப்பட விழாவின் போது, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துணை அமைச்சர் பி.மும்கு தலைமையிலான துருக்கிய தூதுக்குழுவையும் திரு எல் முருகன் சந்தித்தார். இந்தியாவில் படப்பிடிப்பு நடத்துவதற்கான சிறந்த வாய்ப்புகள் குறித்தும், இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவது குறித்தும் துருக்கி தரப்புக்கு இந்தச் சந்திப்பின்போது விளக்கிக் கூறப்பட்டது.
***
ANU/AP/PLM/DL
(Release ID: 1962333)
Visitor Counter : 110