தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
செப்., 29 முதல் அக்., 1 வரை, தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் இந்திய குழுவுக்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தலைமை வகிக்கிறார்
கோவாவில் நவம்பர்20-28-ல் நடைபெறும் 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும், சர்வதேச கூட்டுத் தயாரிப்புகளுக்கான கூட்டாண்மைகளை மேம்படுத்தவும் தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழா தளமாக இருக்கும்
உஸ்பெகிஸ்தானின் அமைச்சர்கள், துருக்கி மற்றும் ரஷ்யாவின் திரைப்பட பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்திக்க திட்டம்
Posted On:
28 SEP 2023 7:06PM by PIB Chennai
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், இந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெறும் தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் இந்தியக் குழுவை வழிநடத்துகிறார். இந்தத் திரைப்பட விழாவில் பங்கேற்பது, சினிமா கூட்டாண்மைகளை உருவாக்குதல், நிகழ்ச்சிகளைப் பரிமாற்றம் செய்தல், திரைப்படத் தயாரிப்பை வளர்ப்பது மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையே பாலமாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "Pearl of The Silk Road" என்று அழைக்கப்படும், தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழா 1968 இல் தொடங்கப்பட்டது, மேலும் விழாவின் தொடக்க பதிப்பில் இந்திய திரைப்படமான ஆம்ரபாலி திரையிடப்பட்டது.
ராஜ் கபூரின் திரைப்படங்கள் உலகம் முழுவதிலுமிருந்து, குறிப்பாக உஸ்பெகிஸ்தான் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளிலிருந்தும் அன்பைப் பெற்ற ஆரம்பகால இந்திய சினிமா நாட்களில், இந்திய சினிமா உலக வரைபடத்தில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியது. நமது கலாச்சார முறையிலான கதை சொல்லல் மற்றும் கலை வடிவங்கள் நம் கதை சொல்லலுக்குள்ளும் கடந்து செல்வதால், இந்திய சினிமா இன்றுவரை ஒரு வசீகரத்தைக் கொண்டுள்ளது, மேலும் சமீபத்தில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் "நாட்டு நாட்டு " பாடலை, இந்தியா மட்டுமல்லாமல், உலகமும் பாராட்டப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சினிமா ஆர்வலர்களின் இதயத்தை வென்ற கோல்டன் குளோப்பில் சிறந்த பாடலுக்கான விருதைப் பெற்றது.
உஸ்பெகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் வரலாற்றில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் கீழ் இருதரப்பு உறவுகளில் குறிப்பிடத்தக்க தீவிரம் ஏற்பட்டுள்ளது. நமது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில், செழுமைப்படுத்தும் படமெடுக்கும் சூழலை உருவாக்கவும், உலகிற்கு இந்தியாவில் வளர்ந்து வரும் வளர்ச்சி வாய்ப்புகளுடன் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தொழில்துறையை உருவாக்கவும், இந்தியா ஆர்வமாக உள்ளது. சினிமாவின் நுட்பங்கள், மற்றும் நமது சினிமா/தொழில்களை உள்ளடக்கியதாக மாற்றுவதற்கான வழிகளை உருவாக்குதல். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இந்த ஆண்டு அதன் தலைமை ஆண்டில், இந்தியா ஜனவரி 2023 இல் மும்பையில் எஸ்சிஓ திரைப்பட விழாவை ஏற்பாடு செய்தது.
தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவின் பங்கேற்பானது, தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் வழங்கிய , 'இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பொருளாதாரத்தைக் காண்பித்தல்' என்ற கருப்பொருளில் உள்ளது, இது உற்சாகமான மற்றும் அர்த்தமுள்ள விவாதங்களுக்கு ஒரு ஊக்கியாக இருக்கும்.
இந்தியா உலகளாவிய உள்ளடக்க மையமாக மாறுவதற்கும், கூட்டுப் படமாக்கல் சூழலை உருவாக்குவதற்கும் வழி வகுக்கும் போது, தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழா உஸ்பெகிஸ்தான் மற்றும் பிற பங்கேற்கும் நாடுகளுக்கு இடையே சினிமா கூட்டாண்மைக்கான தளத்தை வழங்கும். வெளிநாட்டு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு இந்தியாவிற்கு அதிக திரைப்பட தயாரிப்பாளர்களை ஈர்க்கும் வகையில் ஊக்குவிக்கப்படும்.
இந்தியாவின் கோவாவில் 2023 நவம்பர் 20 முதல் 28 வரை திட்டமிடப்பட்ட இந்தியாவின் 54வது சர்வதேச திரைப்பட விழாவின் இந்த ஆண்டு பதிப்பை விளம்பரப்படுத்த விழா மேடை பயன்படுத்தப்படும்.
********
ANU/ SM /PKV/ KRS
(Release ID: 1961858)
Visitor Counter : 112