மத்திய பணியாளர் தேர்வாணையம்

தேசிய ராணுவ அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு (II), 2023 –எழுத்துத்தேர்வு முடிவு அறிவிப்பு

Posted On: 27 SEP 2023 3:33PM by PIB Chennai

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2023, செப்டம்பர் 3 அன்று நடத்தப்பட்ட தேசிய ராணுவ அகாடமி, கடற்படை அகாடமி தேர்வு, (II) 2023 இன் எழுத்துப்பூர்வத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தேர்வானவர்கள் 2024 ஜூலை 2ம் தேதி முதல் தொடங்கவுள்ள 114-வது கடற்படை பயிற்சி வகுப்பு மற்றும் 152-வது தேசிய ராணுவ அகாடமியின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கான பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ சேவைகள் தேர்வு வாரியம் நடத்தும் (எஸ்.எஸ்.பி) நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகள் www.upsc.gov.in என்ற ஆணையத்தின் இணைய தளத்திலும் காணலாம்.

பட்டியலில் உள்ள தேர்வர்களின் எண்கள் தற்காலிகமானது.

 

தேர்வுக்கான நிபந்தனைகளுக்கு இணங்க, "விண்ணப்பதாரர்கள் எழுத்துப்பூர்வ முடிவு அறிவிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் www.joinindianarmy.nic.in என்ற இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு இணையத்தளத்தில் தங்களைப் பற்றிய விவரங்களை  பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எஸ்.பி நேர்காணலின் தேர்வு மையங்கள் மற்றும் தேதிகள் ஒதுக்கப்படும். இது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியில் தெரிவிக்கப்படும். இந்த தளத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள எந்தவொரு விண்ணப்பதாரரும் அவ்வாறு செய்யத் தேவையில்லை.

எஸ்.எஸ்.பி நேர்காணலின் போது விண்ணப்பதாரர்கள் வயது மற்றும் கல்வித் தகுதியின் அசல் சான்றிதழ்களை அந்தந்த சேவை தேர்வு வாரியங்களில் (எஸ்.எஸ்.பி) சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பக்கூடாது.

 மேலும் விரங்களுக்கு தேர்வாணையத்தின் நுழைவுவாயில் 'சி'க்கு அருகில் உள்ள மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 011-23385271/011-23381125/011-23098543 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பத்தாரர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள், இறுதி தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நாளிலிருந்து பதினைந்து (15) நாட்களுக்குள் தேர்வாணையத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்படும். (எஸ்எஸ்பி நேர்காணல்களை முடித்த பின்னர்) மற்றும் முப்பது (30) நாட்களுக்கு இணையதளத்தில் கிடைக்கும்.

 

***

AP/ANU/IR/RS/KPG



(Release ID: 1961405) Visitor Counter : 105