பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்ய பாதுகாப்புத் துறைசார்ந்த பொதுத்துறை உற்பத்தி நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் : பாதுகாப்புத்துறை செயலாளர் திரு கிரிதர் அரமனே
प्रविष्टि तिथि:
26 SEP 2023 1:49PM by PIB Chennai
தற்போது நடைபெற்று வரும் தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக, பாதுகாப்புத் துறை செயலாளர் திரு கிரிதர் அரமனே நேற்று (25.09.2023) மும்பையில் உள்ள மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (எம்.டி.எல்) நிறுவனத்திற்குச் சென்றார். அங்கு கட்டப்பட்டுள்ள ஒரு வளாகத்தை திறந்து வைத்த அவர், நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய பாதுகாப்புத்துறைச் செயலாளர், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தூய்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தூய்மை என்பது சுற்றுப்புறத்தை சுத்தம் செய்வது மட்டுமல்ல என்றும், அது அனைத்து வகையான ஊழல்களிலிருந்தும் விடுபடுவதில் கவனம் செலுத்தக்கூடிய ஒழுக்கம் சார்ந்த விஷயம் என்றும் கூறினார்.
நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்திய திரு கிரிதர் அரமனே , இதில் பாதுகாப்புத்துறை சார்ந்த பொதுத்துறை உற்பத்தி நிறுவனங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் வலியுறுத்தினார். போர்க்கப்பல் கட்டுமானத்தில் உள்நாட்டுப் பொருட்களின் பங்களிப்பை அதிகரிப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் என்று திரு கிரிதர் அரமனே கூறினார்.
***
(Release ID: 1960808)
AP/ANU/PLM/RS/KRS
(रिलीज़ आईडी: 1961079)
आगंतुक पटल : 115