பிரதமர் அலுவலகம்
ஜெய்ப்பூரில் உள்ள தனக்யாவில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2023 9:13PM by PIB Chennai
ஜெய்ப்பூரில் தனக்யாவில் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நினைவிடத்தில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். "அந்தியோதயா கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம் நாட்டில் மிகவும் ஏழ்மையான மக்களின் வாழ்க்கையை எளிதாக்க எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது" என்று பிரதமர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
"ஜெய்ப்பூரில் உள்ள தன்கியாவில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தேசிய நினைவிடத்தில் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினேன். அவரது பிறந்த நாளில், அவரது வாழ்க்கை தொடர்பான பல்வேறு அம்சங்களை இங்கே காணும்போது ஒரு புதிய சக்தி பிறந்தது. அவரது அந்தியோதயா கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம் நாட்டில் மிகவும் ஏழ்மையான மக்களின் வாழ்க்கையை எளிதாக்க எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது."
*****
(Release ID: 1960697)
ANU/SM/SMB/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1960716)
வருகையாளர் எண்ணிக்கை : 202
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam