விவசாயத்துறை அமைச்சகம்

இமயமலையில் புதுமையான குளிர் பிரதேச மாநாடு: ஜம்மு-காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்.சி.சி.டி

Posted On: 25 SEP 2023 2:12PM by PIB Chennai

குளிர் பிரதேச மேம்பாட்டுக்கான தேசிய மையம் தலைமையிலான வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், நாடு முழுவதும் குளிர் பிரதேச தொழில்  முனைவோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பு பணியைத் தொடர்கிறது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அவர்களின் சமீபத்திய முயற்சியான இந்தியா குளிர் பிரதேச மாநாட்டின் மகத்தான வெற்றி அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாக திகழ்கிறது.

தலைமைச் செயலாளர் டாக்டர் அருண் குமார் மேத்தா மற்றும் ஆளுநரின் ஆலோசகர் திரு ராஜீவ் ராய் பட்நாகர் போன்றவர்கள் உட்பட சுமார் 400 பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த மாநாடு ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கான தளமாக செயல்பட்டது.

செப்டம்பர், 20 அன்று நடந்த இந்தக் கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலாளர் டாக்டர் அருண் குமார் மேத்தா, இந்த முக்கியமான மாநாட்டை ஸ்ரீநகரில் நடத்துவதை பாராட்டினார், மேலும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பள்ளத்தாக்கில் உள்ள சிஏ பதப்படுத்துதல் அமைப்புகளின் திறனை அதிகரிக்க வலியுறுத்தினார்.

இணைச் செயலாளர் (தோட்டக்கலை) திரு பிரிய ரஞ்சன் பேசிய போது, நீடித்த குளிர் பிரதேசத்தின் முக்கியத்துவம் குறித்தும், எரிசக்தி, தொழில்நுட்பம், பருவ நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் குளிர் பிரதேச துறையின் வளர்ச்சியை தேசிய குளிர் பிரதேச மேம்பாட்டு மையம் எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறது என்பது குறித்தும் குறிப்பிட்டார்.

இமயமலைப் பகுதியில் நிலையான குளிர் பிரதேச மேம்பாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தார். விரிவான வழிகாட்டுதல்களை நிறுவுவதிலும், விரிவான ஆய்வுகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் திறன் வளர்ப்பு முன்முயற்சிகளை செயல்படுத்துவதிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அவர் சுட்டிக்காட்டினார். வளர்ந்து வரும் உலகளாவிய மக்கள்தொகை காரணமாக வளங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் உலகில் நாம் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டார்.

குளிர் பிரதேசப்பகுதிகளின் தொழிலில் நிகழும் உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப அணுகுமுறையைக் கொண்ட உள்ளூர் விவசாயிகள், நிறுவனங்களின் நலனுக்காக இந்த நிகழ்வை காஷ்மீரில் வருடாந்திர நிகழ்வாக நடத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

***

AP/ANU/IR/RS/KPG



(Release ID: 1960446) Visitor Counter : 119