நிதி அமைச்சகம்
'பொதுத்துறை நிறுவனங்களின் இரண்டு நாள் வட்டமேஜை ஆலோசனை மற்றும் கண்காட்சி நாளை தொடக்கம்
Posted On:
24 SEP 2023 6:05PM by PIB Chennai
மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் ஆதரவுடன் ஸ்கோப் உடன் இணைந்து, நாளை மற்றும் நாளை மறுதினம் என இரண்டு நாட்கள் புதுதில்லியில் 'வட்டமேஜை ஆலோசனை மற்றும் கண்காட்சி 2023' என்ற நிகழ்வை பொதுத் துறை நிறுவனங்கள் துறை நடத்துகிறது.
வட்டமேஜை ஆலோசனை மற்றும் கண்காட்சியின் தொடக்க விழாவில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிசான்ராவ் கரத் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
வர்த்தக தகராறுகளைத் தீர்ப்பதற்கான நிர்வாக வழிமுறை, கார்ப்பரேட் சமூக பொறுப்புடமை, புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்ற பிரச்சனைகள் குறித்து வட்டமேஜை கூட்டத்தில் தொடர்ச்சியான விவாதங்கள் நடைபெறும்.
பொதுத்துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள், செயலாக்க முகமைகள், தொடர்புடைய அமைச்சகங்களைச் சேர்ந்த மாவட்டங்களின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்.
வட்டமேஜை மாநாட்டின் போது, புதுதில்லி பிரகதி மைதானத்தில் 'கார்ப்பரேட் சமூக பொறுப்புடமை- கதை: பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் செயல்படுத்தும் நிறுவனங்கள்' என்ற தலைப்பிலான கண்காட்சியும் நடைபெறவுள்ளது.
***
SM/ANU/BS/KRS
(Release ID: 1960202)
Visitor Counter : 138