சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தேசிய சுகாதார ஆணையம் ஆரோக்கிய ஆய்வு கூட்டம் 2023ஐ நடத்துகிறது.

Posted On: 24 SEP 2023 5:02PM by PIB Chennai

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்ய யோஜனாவின் ஐந்து ஆண்டுகள் நிறைவு மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம்  இரண்டு ஆண்டுகளைக் கொண்டாட தேசிய சுகாதார ஆணையம்சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவை இணைந்து 'ஆரோக்கிய ஆய்வு கூட்டம்' ஏற்பாடு செய்துள்ளன.

 

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இரண்டு நாள் நிகழ்வில் (செப்டம்பர்25 மற்றும் 26 '23) இரண்டு திட்டங்கள் தொடர்பான சவால்கள், போக்குகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்த ஆழமான விவாதங்களைக் கொண்டிருக்கும்.

 

ஆரோக்ய ஆய்வு கூட்டம்  2023 நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும், மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சருமான டாக்டர் மன்சுக் மாண்டவியா சிறப்புரையாற்றுகிறார்.

 

இந்த நிகழ்வில்,, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர்  பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகெல், துறையின் செயலாளர் மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் (சி..) தலைமை நிர்வாக அதிகாரி (சி..) திரு. சுதன்ஷ் பந்த், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

 

2018ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் பிரதமரின்  ஜன் ஆரோக்ய யோஜனா, ஆரோக்கியம், செழிப்பை ஏற்படுத்தியுள்ளதுரூ.69, 000 கோடி மதிப்பிலான மருத்துவ சேவைகளை 5.5 கோடி பேர் பெற்றுள்ளனர். கோடிக்கணக்கான ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்தது.

 

2021 ஆம் ஆண்டு செப்டம்பர்27ஆம் தேதி தொடங்கப்பட்டஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் மூலம். கடந்த 2 ஆண்டுகளில் 45 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 30 கோடிக்கும் அதிகமான சுகாதார பதிவுகள் இந்த கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. சுகாதார விநியோகத்தை வலுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

இந்த அமர்வுகள் என்.எச். சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்: https://www.youtube.com/@AyushmnaNHA/streams   

 

இந்த நிகழ்வின் போது சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை என்.எச். கௌரவிக்கும்.

 

ஆரோக்கிய ஆய்வு கூட்டம்  2023 பற்றிய கூடுதல் விவரங்கள் https://abdm.gov.in/arogyamanthan2023 என்ற இணையதளத்தில் புதுப்பிக்கப்படும்.

 

*********** 

SM/ANU/BS/KRS



(Release ID: 1960180) Visitor Counter : 97