பாதுகாப்பு அமைச்சகம்
பணியின் போது இறந்த பி.ஆர்.ஓ பணியாளர்களின் உடல்களை பாதுகாத்து, அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான வசதி, தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது; பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல்
Posted On:
24 SEP 2023 10:05AM by PIB Chennai
எல்லை சாலைகள் அமைப்பின் (பி.ஆர்.ஓ) பொது ரிசர்வ் பொறியாளர் படை (ஜி.ஆர்.இ.எஃப்) பணியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய 'சடலங்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து' விதிகளை தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கும் (சி.பி.எல்) நீட்டிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். சி.பி.எல்.களுக்கான ஈமச்சடங்கு செலவை ரூ .1,000 லிருந்து ரூ .10,000 ஆக உயர்த்தவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார். பி.ஆர்.ஓ திட்டங்களின்போது, அரசு பணியில் இருக்கும் எந்தவொரு தற்காலிக ஊதியம் பெரும் தொழிலாளர் இறந்தாலும், அவரது இறுதிச் சடங்குகள் பணித்தளத்தில் செய்யப்படுகின்றன.
முன்னோக்கிய / எல்லைப் பகுதிகளில் சாலைகளை நிர்மாணிப்பதற்காக சி.பி.எல்.கள் பி.ஆர்.ஓவால் பணியமர்த்தப்படுகின்றனர். பாதகமான காலநிலை மற்றும் கடினமான வேலை நிலைமைகளில் அவர்கள் பி.ஆர்.ஓ ஊழியர்களுடன் கைகோர்த்து வேலை செய்கிறார்கள், இது சில நேரங்களில் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.
இதுவரை அரசு செலவில் சடலங்களை பாதுகாத்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் வசதி ஜி.ஆர்.இ.எஃப் பணியாளர்களுக்கு மட்டுமே இருந்தது. இதே போன்ற நிலைமைகளில் பணிபுரியும் சி.பி.எல்.களுக்கு இந்த வசதி மறுக்கப்பட்டது. அவர்கள் இறந்தால், போக்குவரத்து சுமை, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீது விழுகிறது. நிதி ஆதாரங்கள் இல்லாததால், பெரும்பாலான நிலைமைகளில் விமான கட்டணம் அல்லது சாலை வழியான போக்குவரத்து செலவுகளை கூட இறந்தவரின் குடும்பத்தினரால் தாங்க முடியவில்லை. துக்கத்தில் இருக்கும் ஒரு குடும்பம் பெரும்பாலும் இறுதிச் சடங்கு மற்றும் பிற தொடர்புடைய செலவுகளைச் சமாளிப்பது மிகவும் கடினம். இத்தகைய சூழ்நிலைகளில், இறந்த சி.பி.எல்.களின் நெருங்கிய உறவினர்கள் / சட்டப்பூர்வ வாரிசுகள், தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த தங்கள் உறவினர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்வதன் மூலம் அஞ்சலி செலுத்த வாய்ப்பு கிடைக்காது.
பாதுகாப்பு அமைச்சர், பி.ஆர்.ஓ பணித்தளங்களுக்குச் சென்றபோது, சி.பி.எல்.களின் கடினமான வேலை நிலைமைகளைக் கண்டார். அவர்களின் நலனில் அக்கறை கொண்ட அவர், அவர்களுக்கான நலத் திட்டங்களை வகுக்குமாறு பி.ஆர்.ஓ.வுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த புதிய நலத் திட்டங்கள், உயிரிழந்தவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு கண்ணியமான இறுதிச் சடங்குகளைச் செய்ய உதவும்.
(Release ID: 1960039)
***
AP/ANU/BR/KRS
(Release ID: 1960077)
Visitor Counter : 164