ஊரக வளர்ச்சி அமைச்சகம்
தீனதயாள் அந்தியோதயா திட்டம்-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கானநிறுவனம் ஆகியவை இணைந்து நான்காவது பாலின உரையாடலை நடத்தின
Posted On:
23 SEP 2023 1:03PM by PIB Chennai
தீனதயாள் அந்தியோதயா திட்டம்-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (டே-என்ஆர்எல்எம்), கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான வாட் ஒர்க்ஸ் நிறுவனம் (ஐ.டபிள்யூ.டபிள்யூ.ஏ.ஜி.இ) ஆகியவை இணைந்து நான்காவது பாலின உரையாடலுக்கு நேற்று ஏற்பாடு செய்தன.
பாலின உரையாடல் என்பது மாநிலங்கள் மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் குரல்களைக் கேட்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் நாடு முழுவதும் டே-என்ஆர்எல்எம் இன் பாலின தலையீடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பகிரப்பட்ட தளத்தை நிறுவுவதற்கான, ஒரு தனித்துவமான, கூட்டு முயற்சியாகும். இந்த மெய்நிகர் நிகழ்வில் மூத்த அதிகாரிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், பீகார் அரசு மற்றும் மாநில அரசு அதிகாரிகள், பயிற்சியாளர்கள், பாலின வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூகசார்வலர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் உட்பட 8000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், பாலின அடிப்படையிலான வன்முறையை நிவர்த்தி செய்ய அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலியுறுத்தினர். பாலின அடிப்படையிலான வன்முறை குறித்த புள்ளிவிவரங்கள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்வதில் சமூக அடிப்படையிலான நிறுவனங்கள் வகிக்கக்கூடிய பங்கு குறித்து வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகத்துடன் விழிப்புணர்வை உருவாக்குதல் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டது.
***
ANU/SM/PKV/DL
(Release ID: 1959874)
Visitor Counter : 140