ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"ஊரக வளர்ச்சித் திட்டங்களின் சமூகத் தணிக்கை" என்ற 2 வது தேசிய கருத்தரங்கில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் செவ்வாய்கிழமையன்று (செப்டம்பர் 26) உரையாற்றுகிறார்

Posted On: 23 SEP 2023 10:03AM by PIB Chennai

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் செவ்வாய்கிழமையன்று (செப்டம்பர் 26)  "ஊரக வளர்ச்சித் திட்டங்களின் சமூகத் தணிக்கை" என்ற 2வதுதேசிய கருத்தரங்கில் உரையாற்றுகிறார். இந்த தேசியக் கருத்தரங்கின் கருப்பொருள் "வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையைக் கொண்டுவரும் நோக்கில் சமூக தணிக்கை எனும் புதிய கருத்தை உருவாக்குதல்" என்பதாகும்.

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் உருக்குத் துறை இணையமைச்சர் திரு ஃபகன் சிங் குலஸ்தே, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, மத்திய பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங், இணைச் செயலாளர் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்) திரு அமித் கட்டாரியா மற்றும் அமைச்சக அதிகாரிகள், அனைத்து மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள்.   

கருத்தரங்கில் பங்கேற்கும் வல்லுநர்கள் மற்றும் அலுவலர்கள் சமூக தணிக்கை தொடர்பான தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள மாநிலங்களிலிருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்துப் பணிகள் மற்றும் செலவினங்கள் வழக்கமான சமூகத் தணிக்கைகள் மேற்கொள்ளும் உரிமையை கிராம சபைக்கு வழங்குகிறது. சுயாதீன சமூகத் தணிக்கை அலகுகள் மூலம் ஆன்லைனிலும் நேரடியாகவும் சமூகத் தணிக்கையை எளிதாக்குதல், அனைத்து பதிவுகளையும்  முழுமையாக அணுகுதல் மற்றும் சுவர் எழுத்துக்கள் மூலம் செயலில் வெளிப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

***

ANU/AP/BS/DL


(Release ID: 1959870) Visitor Counter : 190