வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

சிமெண்ட் வேதியியல் குறித்த 17-வது சர்வதேச மாநாட்டை நடத்தும் முயற்சியில் இந்தியா வெற்றி

Posted On: 21 SEP 2023 10:50AM by PIB Chennai

2027 ஆம் ஆண்டில் புதுதில்லியில் சிமெண்ட் வேதியியல் குறித்த மதிப்புமிக்க சர்வதேச மாநாட்டை நடத்துவதற்கான போட்டியில் இந்தியா வென்றுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள், சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களுக்கான தேசிய கவுன்சில்  மற்றும் ஐ.ஐ.டி தில்லி ஆகியவை தாய்லாந்தின் பாங்காக்கில் நடந்து வரும் 16 வது சர்வதேச மாநாட்டின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் முன் இந்தியாவின் விருப்பத்தை வெற்றிகரமாக சமர்ப்பித்தன. இந்தியாவைத் தவிர, மற்ற போட்டியாளர்கள் சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்தவர்கள் ஆவர். 2023 செப்டம்பர் 20 அன்று தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற 16-வது சர்வதேச மாநாட்டின் போது இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் விருப்பத்தை தேசிய சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களுக்கான தலைமை இயக்குநர்   டாக்டர் எல்.பி.சிங், இணை இயக்குநர் டாக்டர் எஸ்.கே.சதுர்வேதி மற்றும் ஐ.ஐ.டி தில்லியின் பேராசிரியர் (சிவில் இன்ஜினியரிங்) டாக்டர் சஷாங்க் பிஷ்னோய் ஆகியோர் சமர்ப்பித்தனர்.

சிமெண்ட் வேதியியல் குறித்த சர்வதேச மாநாடு என்பது சிமெண்ட் மற்றும் கான்கிரீட் துறையில் ஆராய்ச்சியின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க நிகழ்வாகும். 1918 ஆம் ஆண்டிலிருந்து நான்கு முதல் ஆறு ஆண்டுகள் இடைவெளியில் பொதுவாக மாநாடுகள் நடத்தப்படுகின்றன, இது கல்வி உலகிற்கும், சிமெண்ட் தொழிலுக்கும் இடையே ஒரு வலுவான மற்றும் பயனுள்ள இணைப்பை வழங்குகிறது. 9-வது மாநாடு 1992 ஆம் ஆண்டில் புதுதில்லியில்  நடைபெற்றது. தற்போதைய 16-வது  சர்வதேச மாநாடு 2023 செப்டம்பர் 18-ந் தேதி அன்று தொடங்கி 22  வரை தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறுகிறது.

இந்த மதிப்புமிக்க நிகழ்வை இந்தியாவில் நடத்துவது உலகெங்கிலும் உள்ள சிமெண்ட் துறையில் முன்னணி தலைவர்கள், வல்லுநர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஒன்றிணைக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1959268

***

ANU/AD/IR/AG/GK



(Release ID: 1959358) Visitor Counter : 130