குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, மாநிலங்களவையில் மகளிர் துணைத் தலைவர்களைக் கொண்ட குழுவை அவைத் தலைவர் அமைத்துள்ளார்


நாரி சக்தி வந்தன் அதினியம் 2023 குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடைபெறும் நிலையில் 13 பெண் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

Posted On: 21 SEP 2023 12:13PM by PIB Chennai

நாரி சக்தி வந்தன் அதினியம் மசோதா- 2023 (மக்களவையிலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா) குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், 13 பெண் உறுப்பினர்களைக் கொண்ட துணைத் தலைவர்கள் குழுவை குடியரசுத் துணைத்தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு. ஜக்தீப் தன்கர் அமைத்துள்ளார்.

அவர்கள் அவை நடவடிக்கைகளை நடத்துவது உலகிற்கு ஒரு சக்திவாய்ந்த தகவலை எடுத்துச்சொல்லும் என்றும், மாற்றத்தை உருவாக்கும்  இந்த முக்கிய தருணத்தில் அவர்கள் ஒரு கட்டளையிடும் நிலைக்கு வந்திருப்பதை  இது எடுத்துரைக்கும் என்றும் குடியரசுத் துணைத்தலைவர் குறிப்பிட்டார்.

துணைத்தலைவர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள பெண் மாநிலங்களவை உறுப்பினர்களின் விவரங்கள் பின்வருமாறு:

1. திருமதி பி.டி.உஷா

2. திருமதி எஸ்.பங்னோன் கொன்யாக்

3. திருமதி ஜெயா பச்சன்

4. திருமதி சரோஜ் பாண்டே

5. திருமதி ரஜனி அசோக்ராவ் பாட்டீல்

6. டாக்டர் பௌஸியா கான்

7. திருமதி டோலா சென்

8. திருமதி இந்து பாலா கோஸ்வாமி

9. டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு

10. திருமதி கவிதா பதிதார்

11. திருமதி மஹுவா மாஜி

12. டாக்டர் கல்பனா சைனி

13. திருமதி சுலதா தியோ

***

AD/ANU/PLM/RS/GK



(Release ID: 1959339) Visitor Counter : 107