விண்வெளித்துறை

பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது தொலைநோக்குப் பார்வை மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்கான ஒதுக்கீட்டை அதிகரித்ததன் மூலம் சந்திரயான் -3 திட்டத்தை செயல்படுத்தினார் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

Posted On: 20 SEP 2023 7:02PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது தொலைநோக்குப் பார்வையாலும், விண்வெளி ஆராய்ச்சிக்கான ஒதுக்கீட்டை அதிகரித்ததன் மூலமும் சந்திரயான் -3 திட்டத்தை செயல்படுத்தினார் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், விண்வெளி மற்றும் அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

 

"சந்திரயான் -3 வெற்றிகரமாக மென்மையாகத் தரையிறங்கியதன் மூலம் முத்திரையிடப்பட்ட இந்தியாவின் மகத்தான விண்வெளி பயணம்" குறித்து மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தில்  அவர் பங்கேற்றுப் பேசினார். " தேவைப்படும்போது நாங்கள் அவர்களுக்கு நிதி வழங்கியுள்ளோம்தேவைப்படும்போது நாங்கள் அவர்களுக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம், தேவைப்படும்போது நாங்கள் அவர்களுக்கு ஒருங்கிணைப்பை வழங்கியுள்ளோம்திணிக்கப்பட்ட தளைகளிலிருந்து நாங்கள் அவர்களை விடுவித்துள்ளோம், இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் நடந்துள்ளது" என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்

 

பிரதமர் மோடி விண்வெளி பட்ஜெட் ஒதுக்கீட்டைப்  பன்மடங்கு உயர்த்தினார். விண்வெளித் துறையைத் தனியாருக்குத் திறந்தார். இதன் விளைவாக 2014 ஆம் ஆண்டில் வெறும் 4 ஆக இருந்த விண்வெளி ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை இப்போது 150 ஆக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.

 

"விண்வெளி பட்ஜெட்டை மட்டும் பார்த்தால், கடந்த ஒன்பது ஆண்டுகளில் 142% அதிகரிப்பு உள்ளது" என்று கூறிய அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அணுசக்தித் துறை போன்ற தொடர்புடைய வரவுசெலவுத் திட்டங்களில் மூன்று மடங்கு அல்லது அதற்கும் கூடுதலான அதிகரிப்பு இருப்பதை சுட்டிக்காட்டினார்.

 

1990 களில் இருந்து இஸ்ரோவால் செலுத்தப்பட்ட 424 வெளிநாட்டு செயற்கைக்கோள்களில், 90% க்கும் அதிகமானவை - 389 - கடந்த ஒன்பது ஆண்டுகளில் செலுத்தப்பட்டன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

 

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதன் மூலம் இதுவரை 174 மில்லியன் அமெரிக்க டாலரை சம்பாதித்துள்ளோம். இந்த 174 மில்லியன் டாலரில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டுமே 157 மில்லியன் டாலர் ஈட்டப்பட்டுள்ளது... கடந்த 30 ஆண்டுகளில் அல்லது அதற்கும் மேலாக இதுவரை செலுத்தப்பட்ட ஐரோப்பிய செயற்கைக்கோள்களில், மொத்த வருவாய் 256 மில்லியன் யூரோக்கள்இதில்  223 மில்லியன் யூரோ, ஏறத்தாழ 90% கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஈட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்

 

இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் இன்று சுமார் 8 பில்லியன் டாலராக உள்ளது, ஆனால் இது 2040 க்குள் 40 பில்லியன் டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது, மேலும் .டி.எல் (ஆர்தர் டி லிட்டில்) அறிக்கையின்படி, 2040 க்குள் நாம் 100 பில்லியன் டாலர் திறனைக் கொண்டிருக்கலாம் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

 

இந்தியாவின் விண்வெளிப் பயணங்கள் செலவு குறைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். தோல்வியுற்ற ரஷ்ய நிலவு திட்டத்திற்கு ரூ.16,000 கோடி செலவானது என்றும், நமது சந்திரயான் -3 திட்டத்திற்கு சுமார் ரூ.600 கோடி மட்டுமே செலவானது என்றும் அமைச்சர் கூறினார். நமது திறமைகள் மூலம் செலவை ஈடுகட்ட கற்றுக் கொண்டோம் என்று அவர் தெரிவித்தார்.

 

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் தனியார் துறையை ஈடுபடுத்துவதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி "அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை" மசோதாவைக் கொண்டு வந்தார் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இதற்குப் பெரும்பான்மையான நிதி அரசு சாரா ஆதாரவளங்களிலிருந்து கிடைக்கும். ஐந்து ஆண்டுகளில் அதன் வரவுசெலவுத் திட்டமான ரூ.50,000 கோடியில், ரூ.36,000 கோடி, சுமார்  80% தொழில்துறை மற்றும் கொடையாளர்களிடமிருந்து வரவுள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

 

இன்று உலகம் இந்தியாவை உற்று நோக்குகிறது என்றும், பிரதமர் மோடியின் கீழ் இந்தியா வழிநடத்தத்  தயாராக உள்ளது என்றும்அவர் தெரிவித்தார்.

*********

 

ANU/SM/SMB/KRS



(Release ID: 1959226) Visitor Counter : 105