பாதுகாப்பு அமைச்சகம்
அகில இந்திய தரைப்படை சைனிக் முகாம் 2023-ஐ என்.சி.சி தலைமை இயக்குநர் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
20 SEP 2023 11:48AM by PIB Chennai
தேசிய மாணவர் படை (என்.சி.சி) தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் 2023, செப்டம்பர் 20 அன்று தில்லி கன்டோன்மென்ட்டில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் தேசிய மாணவர் படைக்கான அகில இந்திய தரைப்படை சைனிக் முகாமை முறைப்படி தொடங்கி வைத்தார். இம்முகாமில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 17 தேசிய மாணவர் படை இயக்ககங்களைச் சேர்ந்த சுமார் 1,547 பேர் (867 மாணவர்கள் மற்றும் 680 மாணவிகள்) பங்கேற்கின்றனர். செப்டம்பர் 19ல் தொடங்கி, 12 நாட்கள் நடைபெறும் முகாமில், துப்பாக்கிச் சுடுதல், தடை பயிற்சி, வரைபட வாசிப்பு மற்றும் பிற தொழில்முறை பயிற்சி போட்டிகள் என, பல பிரிவுகளில் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய என்.சி.சி தலைமை இயக்குநர், இது சாகசம், ஒழுக்கம் மற்றும் மதிப்பு நிறைந்த வாழ்க்கையின் வெளிப்பாட்டை அவர்களுக்கு வழங்கும் என்றும், இதன் மூலம் தலைமைத்துவம் மற்றும் தோழமை உணர்வை வளர்க்கும் என்று கூறினார். இராணுவப் பிரிவு பயிற்சியின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துவது, போட்டி மனப்பான்மையை உருவாக்குவது மற்றும் பங்கேற்கும் மாணவர்களிடையே ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை வளர்ப்பது இந்த முகாமின் நோக்கமாகும் என்று அவர் மேலும் கூறினார்.
*****
(रिलीज़ आईडी: 1958998)
आगंतुक पटल : 170