பிரதமர் அலுவலகம்
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் மற்றும் பிற உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
Posted On:
17 SEP 2023 8:19PM by PIB Chennai
நாள் வாழ்த்து தெரிவித்த குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் பிற உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவருக்கு பிரதமர் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது;
"@rashtrapatibhvn, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வளமான மற்றும் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப உங்கள் உத்வேகமும் வழிகாட்டுதலும் மிகவும் முக்கியம்."
குடியரசுத் துணைத்தலைவருக்கு பிரதமர் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது;
"@VPIndia ஜகதீப் தன்கர் ஜி அவர்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி"
முன்னாள் குடியரசுத் தலைவருக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியுப்பதாவது;
"@ramnathkovind ஜி, இதயத்திலிருந்து ஆசீர்வாதம். அன்பும் பாசமும் நிறைந்த உங்கள் இந்த வார்த்தைகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன."
முன்னாள் குடியரசுத் துணைத்தலைவருக்கு பிரதமர் அளித்த பதில்;
"உங்கள் சிறப்பு வாழ்த்துக்களுக்கு நன்றி @MVenkaiahNaidu சார்."
மொரீஷியஸ் பிரதமருக்கு பிரதமர் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது;
‘’எனது நண்பர் பிரதமர் @KumarJugnauth வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’.
இத்தாலி பிரதமருக்கு பிரதமர் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது;
‘’உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி பிரதமர் @GiorgiaMeloni’’
****
AD/PKV/KRS
(Release ID: 1958341)
Visitor Counter : 142
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam