நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பூங்காக்கள் மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பு மேம்பாட்டிற்கு பிரதமர் பாராட்டு
Posted On:
16 SEP 2023 10:44AM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகம் நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களுடன் தொடர்ந்து ஒருங்கிணைத்து, நிலக்கரி அகற்றப்படாத நிலம், குப்பைக் கிடங்குகள் மற்றும் நிலக்கரி இல்லாத நிலங்களில் பெரிய அளவில் தோட்டங்களை அமைப்பதை ஊக்குவித்து வருகிறது. சமீபத்திய மதிப்பீட்டின்படி, நடப்பு நிதியாண்டில், நிலக்கரி நிறுவனங்கள், 2,338 ஹெக்டேர் பரப்பளவிலான நிலத்தில், 43 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 10,000 ஹெக்டேர் பரப்பில் 2.24 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நிலக்கரியை வெளியேற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சத்தீஸ்கர் கிழக்கு ரயில் வழித்தடத்தை திறந்து வைத்த பிரதமர் திரு. நரேந்த மோடி, "சுற்றுச்சூழல் பூங்காக்களை" உருவாக்குவதன் மூலம் அழிக்கப்பட்ட நிலத்தை மீட்டெடுப்பதற்கான நிலக்கரி நிறுவனங்களின் முயற்சிகளைப் பாராட்டினார்.
கிடைக்கக்கூடிய நிலங்களை உயிர்ப்பு தன்மையை மீட்டமைப்பதற்கான தெளிவான திட்டமிடல் மற்றும் வரையறையுடன் கூடிய முயற்சிகளை நிலக்கரி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் இத்தகைய தோட்டங்களை "ஈடுசெய்யும் காடு வளர்ப்பு" தேவைக்காக கணக்கிடுவதை ஊக்குவித்துள்ளது.
அதன்படி, அனைத்து நிலக்கரி நிறுவனங்களும் "அங்கீகாரம் பெற்ற ஈடுசெய்யும் காடு வளர்ப்பு பகுதி" என்று அறிவிக்கை வெளியிடப்பட்ட சுமார் 2800 ஹெக்டேர் நிலத்தை மேம்படுத்த அந்தந்த மாநில வனத்துறைக்கு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன. நிலக்கரி உற்பத்தி செய்யும் பகுதிகளில் நியாயமான மாற்றத்தை உறுதி செய்வதற்காக சுற்றுச்சூழல் நிலையான நடவடிக்கைகளுக்கு நிலக்கரி அமைச்சகம் அதிக முன்னுரிமை அளித்துள்ளது.
***
ANU/AP/BS/DL
(Release ID: 1957938)
Visitor Counter : 176