திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

இந்தியா டிஜிட்டல் திட்டத்தைத் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்

Posted On: 13 SEP 2023 8:14PM by PIB Chennai

ஒவ்வொரு இந்தியருக்கும் தரமான திறன் மேம்பாடு, பொருத்தமான வாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோர் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இந்தியாவின் திறன்கள், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் துறைகளை ஒருங்கிணைத்து மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான டிஜிட்டல் தளமான திறன்  இந்தியா டிஜிட்டல் (எஸ்ஐடி) தளத்தை மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று அறிமுகப்படுத்தினார். தொழில்துறை தொடர்பான திறன் படிப்புகள், வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோர் ஆதரவை விரிவுபடுத்துவதால் சிறந்த வாய்ப்புகள் மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்க்கும் லட்சக் கணக்கான இந்தியர்களின் விருப்பங்கள் மற்றும் கனவுகளை இந்தத் தளம் உள்ளடக்கியிருக்கிறது . இந்நிகழ்ச்சியில், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மற்றும் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டார்.

 

எஸ்ஐடி என்பது இந்தியாவின் திறன் மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் சூழல் அமைப்புக்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பாகும். டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை 4.0 திறன்களில் கவனம் செலுத்தி, திறன் மேம்பாட்டை மிகவும் புதுமையானதாகவும், அணுகக்கூடியதாகவும்மாற்றுவதற்கான தொலைநோக்கு பார்வையால் உந்தப்பட்ட இந்த அதிநவீன தளம், திறமையாளர்களை பணியமர்த்துவதை விரைவுபடுத்துவதற்கும், வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் தொழில் முன்னேற்றத்தை எளிதாக்குவதற்கும் ஒரு திருப்புமுனையாக இருக்கும். டிஜிட்டல் திறன்கள் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதற்காக டிபிஐ மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான ஜி 20 கட்டமைப்பில் வெளிப்படுத்தப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடன் இந்தத்  தளம் சரியாக ஒத்திசைந்துள்ளது . இது அனைத்து திறன் மற்றும் தொழில்முனைவோர் முன்முயற்சிகளுக்கான ஒரு விரிவான தகவல் நுழைவாயிலாகவும் உள்ளது. இது தொழில் முன்னேற்றம், வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகியவற்றைத் தேடுவதில் குடிமக்களுக்கான ஒரு மையமாகும்.

 

தொடக்க விழாவில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், திறன் இந்தியா டிஜிட்டல் அனைத்துத் திறன் முயற்சிகளையும் ஒன்றிணைக்கும்  அதிநவீன தளமாகும். உலகளாவிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் திறன் இடைவெளிகளை சரிசெய்வதற்கான இந்தியாவின் ஒருமித்த கருத்து இந்தியாவின் வெற்றிகரமான ஜி 20 தலைமையின் மையமாகும் என்று அவர் கூறினார். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மற்றொரு பாய்ச்சலை மேற்கொண்டுள்ள எம்.எஸ்.டி., இந்தியாவின் மாறுபட்ட மக்கள்தொகையின் திறன் தேவைகளை சரிசெய்ய ஒரு திறந்த மூல தளத்தை உருவாக்கியுள்ளது. திறன் இந்தியா டிஜிட்டல் என்பது இந்தியாவை உலகளாவிய திறன் மையமாக நிறுவுவதற்கான  மற்றொரு படியாகும்  என்று அவர் மேலும் கூறினார். கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டில் ஒரு புரட்சியான திறன் இந்தியா டிஜிட்டல் எல்லோருக்கும், எங்கேயும், எபோதும் திறன் பெற உதவும் என்று அவர்  கூறினார்.

 

ஜி 20 உச்சிமாநாட்டின் மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்று டிபிஐக்கள் பற்றியது என்று அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்  கூறினார்  . திறன் இந்தியா டிஜிட்டல் நிச்சயமாக இளைஞர்களுக்கு மிக முக்கியமான டிபிஐக்களில் ஒன்றாகும்மேலும் புதிய இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் மிக முக்கிய இரண்டு கூறுகளான திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா ஆகியவற்றின் சந்திப்பாக இது உள்ளது.என்று அவர் கூறினார்.

 

இந்த நிகழ்வின் போது, டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்கும், தொழில் பங்களிப்பை மேம்படுத்துவதற்கும், கற்போர் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் முன்னணி நிறுவனங்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

***********

SM/SMB/KRS



(Release ID: 1957188) Visitor Counter : 166