மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
2023, செப்டம்பர் 15, அன்று மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிரதமரின் மத்சய சம்பட யோஜனாவின் 3 வது ஆண்டு விழாவில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா உரையாற்றுகிறார்
प्रविष्टि तिथि:
13 SEP 2023 2:14PM by PIB Chennai
பிரதமரின் மத்சய சம்படா யோஜனா வெற்றிகரமான மூன்று ஆண்டுகளை நிறைவு செய்ததை நினைவுகூர மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வில் 2023,செப்டம்பர் 15 அன்று மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா உரையாற்றுவார். மீன்வளத் துறையின் "மத்சய சம்பட விழிப்புணர்வு இயக்கத்தின்" ஆறு மாத கால திட்டத்தை அமைச்சர் தொடங்கிவைப்பார். இது மத்சய சம்படா திட்டத்தைத் திறம்பட செயல்படுத்துவதையும், தகுதியான பயனாளிகள் திட்டங்களின் நன்மைகளைப் பெறுவதற்கு சாத்தியமான பங்குதாரர்களை சென்றடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. செப்டம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படும், மீன்வளத் துறையின் பன்முகத் திறன்கள் குறித்தும், மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போருக்கு பிரதமரின் திட்டம் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2.8 கோடி மீன் பண்ணையாளர்கள் மற்றும் 3477 கடலோர கிராமங்களை சென்றடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மீன்வளத் துறை மற்றும் அதன் கள நிறுவனங்களின் ஒன்பது ஆண்டு சாதனைகள் மற்றும் வெற்றிக் கதைகள் பற்றிய தகவல்களை நாடு முழுவதும் பரப்புவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாடு, மீன் பிடிப்புக்கு பிந்தைய உள்கட்டமைப்பு மற்றும் பிற மதிப்புத் தொடர் அதிகரிப்புத் தலையீடுகள் தொடர்பான பல்வேறு திட்டங்களையும் திரு பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைப்பார். நிகழ்ச்சியின் தொடக்க அமர்வைத் தொடர்ந்து பல்வேறு மீன்வள நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பயனாளிகள் மற்றும் மீன் வளர்ப்பவர்கள் தங்கள் வெற்றிக் கதைகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள், மீன் வளர்ப்போர், தொழில் முனைவோர், பிற பங்குதாரர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையைச் சேர்ந்த ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் இது ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும் என்பதை இது உறுதிசெய்கிறது. மீன்வளத் துறையின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு காலப் பங்களிப்பு மற்றும் சாதனையை இந்த நிகழ்வு எடுத்துரைக்கும்.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், மத்தியப் பிரதேச அரசின் மீன்வளம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு துள்சி சிலாவத் ஆகியோர் மீன்வளத் துறையின் திட்டம் மற்றும் மேம்பாடு குறித்த தங்களின் கருத்துக்களை தெரிவிப்பார்கள்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மீன்வளத் துறை பிரதிநிதிகள், மீன்வளத் துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், ஐ.சி.ஏ.ஆர் நிறுவனங்கள் மற்றும் பிற தொடர்புடைய துறைகள் / அமைச்சகங்கள், பயனாளிகள், மீனவர்கள், மீன் பண்ணையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து மீன்வளத் துறையில் ஈடுபட்டுள்ள முக்கிய பங்குதாரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீன்வளத் துறையும், ஐதராபாதில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியமும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கின்றன.
***
SM/SMB/KRS
(रिलीज़ आईडी: 1957182)
आगंतुक पटल : 168