நிதி அமைச்சகம்

அனைவரையும் உள்ளடக்கிய நிதிச்சேவைக்கான நான்காவது ஜி 20 உலகளாவிய கூட்டாண்மைக் கூட்டம் 2023 செப்டம்பர் 14 - 16 தேதிகளில் மும்பையில் நடைபெறவுள்ளது

Posted On: 13 SEP 2023 3:41PM by PIB Chennai

அனைவரையும் உள்ளடக்கிய நிதிச்சேவைக்கான நான்காவது ஜி 20 உலகளாவிய கூட்டாண்மை (ஜிபிஎஃப்ஐ) கூட்டம் 2023 செப்டம்பர் 14 முதல் 16 வரை மும்பையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஜி 20 உறுப்பு நாடுகள், சிறப்பு அழைப்பாளர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.இந்தக் கூட்டத்தில் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் நிதிச்சேவை மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவன நிதி ஆகிய துறைகளில் ஜி 20 இந்தியா தலைமையின் கீழ்  தற்போதைய பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.

 

கூட்டத்திற்கு முன்னதாக, எம்.எஸ்.எம்..க்களை உற்சாகப்படுத்துவதற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு குறித்த கருத்தரங்கம் செப்டம்பர் 14, 2023 அன்று நடைபெறும். "டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மூலம் உயர் பொருளாதார வளர்ச்சிக்கு எம்.எஸ்.எம்..க்களை உற்சாகப்படுத்துதல்" மற்றும் "கடன் உத்தரவாதங்கள் மற்றும் எஸ்.எம். சூழல் அமைப்புகள்" ஆகிய இரண்டு முக்கிய கருப்பொருள்கள் குறித்து உலகளாவிய வல்லுநர்களிடையே குழு விவாதங்கள் நடைபெறும். .

 

அடுத்த இரண்டு நாட்களில், ஜி.பி.எஃப். உறுப்பினர்கள் டிஜிட்டல் நிதி சேர்க்கைக்கான ஜி 20 ஜி.பி.எஃப். உயர் மட்ட கொள்கைகளை செயல்படுத்துவது, தேசிய பணம் அனுப்பும் திட்டங்களை புதுப்பித்தல் மற்றும் எஸ்.எம். சிறந்த நடைமுறைகள் மற்றும் எஸ்.எம். நிதியளிப்பில் பொதுவான தடைகளை சமாளிக்க புதுமையான கருவிகள் குறித்து விவாதிப்பார்கள்.

 

ஜிபிஎஃப்ஐ கூட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 16, 2023 அன்று "டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மூலம் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துதல்: டிஜிட்டல் மற்றும் நிதி எழுத்தறிவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மூலம் நுகர்வோருக்கு அதிகாரமளித்தல்" என்ற கருத்தரங்கம் நடைபெறும்.

 

4வதுஜிபிஎஃப்ஐ டபிள்யூஜி கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் மும்பையில் உள்ள கன்ஹேரி குகைகளையும் பார்வையிடுவார்கள்.

 

*************

 

(Release ID: 1956929)

SM/SMB/KRS



(Release ID: 1957160) Visitor Counter : 89