கலாசாரத்துறை அமைச்சகம்

கலாச்சார அமைச்சகம் தூய்மை இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தியது

Posted On: 13 SEP 2023 3:35PM by PIB Chennai

கலாச்சார அமைச்சகம் அதன் இணைக்கப்பட்ட, துணை மற்றும் தன்னாட்சி அமைப்புகள் மூலம் டிசம்பர் 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை தூய்மை இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தியது. இதனை, நிலுவை விஷயங்களுக்குத் தீர்வுகாண்பதற்கான சிறப்பு இயக்க (எஸ்.சி.டி.பி.எம்) போர்ட்டலில் மாதாந்திர அறிக்கைகள் தவறாமல் பதிவேற்றப்பட்டன.

இந்த காலகட்டத்தில், அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனை (ஐ.எம்.சி) குறிப்புகளில் (அமைச்சரவை முன்மொழிவு) 100% , மாநில அரசுக்  குறிப்புகளில் சுமார் 82%, பிரதமர் அலுவலகக்  குறிப்புகளில் 86%, நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்புகளில் 73%  தீர்வு காணப்பட்டுள்ளது.ஆய்விற்கு ஒதுக்கப்பட்ட மொத்தக்  கோப்புகளில், 71% கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தூய்மைப் பணிக்கு  அடையாளம் காணப்பட்ட 66 இடங்களில், 56 இடங்களில் தூய்மைப் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

2023 ஏப்ரல்16 முதல்30 வரை தூய்மை இருவார விழா அமைச்சகத்தால் நடத்தப்பட்டது. இந்த இருவார விழாவின் போது, அமைச்சகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் தூய்மை உறுதிமொழி ஏற்றனர். தூய்மை, முறையான பதிவேடு மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக அனைத்து பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள அலுவலக வளாகங்களில் தூய்மை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சாஸ்திரி பவன் உள்ளேயும் அதைச் சுற்றியுள்ள அலுவலக வளாகத்தையும் சுத்தமாகவும் தூய்மையாகவும் மாற்ற தூய்மை இயக்கம் / உழைப்பு  தானத்திற்கு  ஏற்பாடு செய்யப்பட்டது.

***

AP/SMB/KRS



(Release ID: 1957132) Visitor Counter : 92