மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் சார்பாக, நிலுவையில் உள்ள விவரங்களைத் தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரம்

Posted On: 13 SEP 2023 9:03AM by PIB Chennai

நிலுவையில் உள்ள விவரங்களைத்  தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரத்தின் (எஸ்.சி.டி.பி.எம்) ஒரு பகுதியாக, கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை, டிசம்பர் 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரையிலான காலகட்டத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு விஷயங்களைக் குறைத்துள்ளது:

பொதுமக்கள் குறைகளுக்குத் தீர்வு: 95.71% மக்கள் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது (27600 குறைகளில் 26417).

எம்.பி.க்களின் குறிப்புகள்: எம்.பி.க்களிடமிருந்து பெறப்பட்ட 75.10% குறிப்புகள் தீர்க்கப்பட்டுள்ளன (466 இல் 350).

நாடாளுமன்ற உத்தரவாதம்: 59.50% நாடாளுமன்ற உத்தரவாதங்கள் தீர்க்கப்பட்டுள்ளன (79 இல் 47).

பொதுமக்கள் குறைகளின் மேல்முறையீட்டு மனுக்கள்: 90.50%  குறைகளின் மேல்முறையீடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது (6588 இல் 5962).

களையெடுக்கப்பட்டுள்ள மொத்த கோப்புகள்: அடையாளம் காணப்பட்டுள்ளன கோப்புகளில் 79.87%  களையெடுக்கப்பட்டுள்ளன (மொத்தம் அடையாளம் காணப்பட்ட 8329 கோப்புகளில், 6652).

189 உயர்கல்வி நிறுவனங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

நிலுவையில் உள்ள தொகையைக் குறைப்பதற்கும், அதன் வளாகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தூய்மையை உறுதி செய்வதற்கும் அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. நிலுவையைக் குறைத்தல், தூய்மையை நிறுவனமயமாக்குதல், அக கண்காணிப்பு பொறிமுறையை வலுப்படுத்துதல், பதிவேடுகள் மேலாண்மையில் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், மேம்பட்ட பதிவேடு மேலாண்மைக்காக இயல் பதிவுகளை டிஜிட்டல்மயமாக்குதல் மற்றும் அனைத்து அமைச்சகங்கள் / துறைகளையும் ஒரே டிஜிட்டல் தளத்தில் கொண்டு வருதல் ஆகியவை இந்த பிரச்சாரத்தின் நோக்கங்களாகும்.

அமைச்சகங்கள் / துறைகளின் தொகுப்பைக் கொண்ட புது தில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் பல முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. நடைபாதைகளில் உள்ள குப்பைகளை அகற்றவும், கொட்டப்படும் மரச்சாமான்கள் மற்றும் உபகரணங்களின் கழிவுகளை அகற்றவும், அத்தகைய கழிவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டு செல்லப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி அப்புறப்படுத்தப்படும் வகையில், குப்பை கிடங்கு உருவாக்கப்பட்டுள்ளது. வளாகத்தில் மறுசுழற்சி பிரிவு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

***

 

ANU/AP/BR/AG


(Release ID: 1956831) Visitor Counter : 107