சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஆயுஷ்மான் பவ இயக்கத்தை 2023 செப்டம்பர் 13 அன்று காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்

Posted On: 12 SEP 2023 5:51PM by PIB Chennai

நாடு முழுவதும் உயர்தர சுகாதார சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், மேற்கொள்ளப்படும் மற்றொரு முக்கியமான நிகழ்வாக ஆயுஷ்மான் பவ இயக்கம் தொடங்கப்படுகிறதுகுடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நாளை (13.09.2023) 'ஆயுஷ்மான் பவ' இயக்கத்தை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கம் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு (யு.எச்.சிஅனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமையும்.

 

தொடக்க விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு  மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர்கள்  திருமதி பாரதி பிரவீன் பவார் மற்றும் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகெல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள்  காணொலி முறையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத் தலைநகரங்கள், வட்டாரத் தலைமையிடங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களில் இருந்து ஏராளமான மக்கள் பிரதிநிதிகள், பயனாளிகள்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

 

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப்படும் 'ஆயுஷ்மான் பவ' இயக்கம், ஒரு விரிவான நாடு தழுவிய சுகாதார முன்முயற்சியாகும். இது நாட்டின் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்தில்  சிறந்த சுகாதாரப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

ஆயுஷ்மான் பவ இயக்கம் என்பது சுகாதாரத் துறை, பிற அரசுத் துறைகள் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கிராம பஞ்சாயத்துகளால் செயல்படுத்தப்படும் ஒரு கூட்டு முயற்சியாகும். புவியியல் தடைகளைத் தாண்டி, ஒவ்வொரு கிராமம் மற்றும்  நகரத்திற்கு விரிவான சுகாதார பாதுகாப்பை விரிவுபடுத்துவதும், யாரும் பின்தங்கிவிடாமல் அனைவருக்கும் சேவைகள்  கிடைப்பதை உறுதி செய்வதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

 

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று (12.09.2023) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆயுஷ்மான் பவ இயக்கத்தை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து காணொலி மூலம் கலந்துரையாடினார்அப்போது ஆயுஷ்மான் பவ முன்முயற்சியின் முக்கியத்துவத்தை திரு  மாண்டவியா எடுத்துரைத்தார்.

*

AD/ANU/PLM/RS/KRS

(Release ID: 1956673)


(Release ID: 1956750) Visitor Counter : 195