பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஆர்வமுள்ள வட்டாரங்கள் திட்ட தொகுதி இப்போது ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி மேடையில் நேரலை
Posted On:
12 SEP 2023 1:39PM by PIB Chennai
கர்மயோகி பாரத் எஸ்.பி.வி.யால் நிர்வகிக்கப்படும் அரசு அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு சுற்றுச்சூழல் அமைப்பான ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி பாரத், நிதி ஆயோக் உடன் இணைந்து, முன்னேறத்துடிக்கும் ஆர்வமுள்ள வட்டாரங்கள் திட்டத்திற்கு (ஏபிபி) அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
நிதி ஆயோக், லட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அடையாளம் காணப்பட்ட 500 வட்டாரங்களில் உள்ள 5000 வட்டார அளவிலான அலுவலர்களின் செயல்பாட்டு, கள மற்றும் நடத்தை திறன்களை உருவாக்க இந்த சேகரிப்பு முயல்கிறது.
ஐ.ஜி.ஓ.டி பிளாட்ஃபார்ம், பின்தங்கிய வட்டாரங்களை மாற்றியமைப்பதில் வட்டார அதிகாரிகளின் பங்களிப்பை வளப்படுத்தவும் செயல்படுத்தவும் முயற்சிக்கும், இதன் மூலம் இந்தியா முழுவதும் அடிமட்ட நிர்வாகத்தை மேம்படுத்தும்.
ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி (https://igotkarmayogi.gov.in/) என்பது அரசாங்க அதிகாரிகளுக்கு அவர்களின் திறன் வளர்ப்பு பயணத்தில் வழிகாட்ட ஒரு விரிவான ஆன்லைன் போர்ட்டலாகும். ஆன்லைன் கற்றல், திறன் மேலாண்மை, தொழில் மேலாண்மை, விவாதங்கள், நிகழ்வுகள் மற்றும் நெட்வொர்க்கிங் ஆகியவற்றிற்கான 6 செயல்பாட்டு மையங்களை இந்த போர்டல் ஒருங்கிணைக்கிறது. ஐ.ஜி.ஓ.டி., தளத்தில், 685க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளில், 22.2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
***
AP/PKV/GK
(Release ID: 1956630)