நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

நிலுவையில் உள்ள விவகாரங்களைத் தீர்ப்பதற்கும், தூய்மைப்படுத்துவதற்கும் நிதி ஆயோக் சார்பாக சிறப்பு பிரச்சாரம் 2.0

Posted On: 12 SEP 2023 10:14AM by PIB Chennai

"தூய்மையான இந்தியா" என்ற இதயப்பூர்வமான அஞ்சலியை மகாத்மா காந்திக்கு செலுத்தும் நோக்கில், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர்ப்புத் துறை (டி.ஏ.ஆர்.பி.ஜி) நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரத்தை 2021 அக்டோபர் 2 முதல் 31வரை தொடங்கியது. இந்தப் பிரச்சாரத்தின் வெற்றியுடன், 2022-ஆம் ஆண்டிலும், 2023-ஆம் ஆண்டிலும் பிரச்சாரத்தைத் தொடர டி.ஏ.ஆர்.பி.ஜி முடிவு செய்தது. அதன்படி, நவம்பர் 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை, பொதுமக்களின் குறைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசுகளின் குறிப்புகள், அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனைகள் மற்றும் அமைச்சகங்கள் / துறைகளின் நாடாளுமன்ற உத்தரவாதங்கள் ஆகியவற்றை சரியான நேரத்தில் மற்றும் திறம்பட தீர்ப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் சிறப்பு பிரச்சாரம் 2.0 மேற்கொள்ளப்பட்டது.

நிதி ஆயோக் மற்றும் அதனுடன் இணைந்த அலுவலகங்களான வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் (டி.எம்.இ.ஓ), அடல் புத்தாக்க இயக்கம் (ஏ.ஐ.எம்) மற்றும் அதன் தன்னாட்சி நிறுவனமான தேசிய தொழிலாளர் பொருளாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (என்.ஐ.இ.ஆர்.டி)ஆகியவற்றால் நிலுவையில் உள்ள விவகாரங்கள் மற்றும் தூய்மைக்கான சிறப்பு பிரச்சாரம் 2.0 மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்றஉறுப்பினர்கள், மாநில அரசுகள், அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனைகள் மற்றும் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் நாடாளுமன்ற உத்தரவாதங்கள் ஆகியவற்றை சரியான நேரத்தில் மற்றும் திறம்பட தீர்ப்பதை உறுதி செய்வதே இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.  தூய்மை இந்தியா இயக்கத்தின் "சிறப்பு பிரச்சாரம் 2.0", பதிவேடு மேலாண்மை, தூய்மை (உட்புற மற்றும் வெளிப்புறம்) மற்றும் அலுவலக கழிவுகளை அகற்றுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த இயக்கத்தின் கீழ், பொதுமக்களின் குறைகள், நாடாளுமன்ற உத்தரவாதங்கள், பிரதமர் அலுவலக குறிப்புகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பது வேகமெடுத்துள்ளது. பதிவேடு மேலாண்மையின் கீழ், கணிசமான எண்ணிக்கையிலான கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன / களையெடுக்கப்பட்டன, இடம் ஒழிக்கப்பட்டது மற்றும் அலுவலக குப்பை அகற்றுதல் மூலம் வருவாய் ஈட்டப்பட்டது. பரிசீலனைக்கு ஒதுக்கப்பட்ட மொத்த கோப்புகளில், 75 சதவீதத்திற்கும் அதிகமான கோப்புகள் மறுஆய்வு செய்யப்பட்டுள்ளன.  மேற்கூறியவற்றுடன், கிட்டத்தட்ட 95% மக்கள் குறைகள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களுக்கு இக்காலகட்டத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது.

***

ANU/AP/BR/GK


(Release ID: 1956560) Visitor Counter : 155