கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

விளாடிவோஸ்டோக்கில் நடைபெறும் கிழக்குப் பொருளாதார அமைப்பு, 2023-ல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த திரு சர்பானந்த சோனாவால் ரஷ்யா புறப்பட்டார்

Posted On: 11 SEP 2023 11:51AM by PIB Chennai

 ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டோக்கில் நடைபெறும் கிழக்குப் பொருளாதார அமைப்பில், இந்தியாவின் பிரதிநிதியாக துறைமுகங்கள், கப்பல்போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். வலுவான உறவுகளைப் பேணுவதையும், பல்வேறு துறைகளில் உத்திபூர்வமாக வர்த்தக மற்றும் தளவாட ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் ரஷ்யாவின் தூரக் கிழக்கு மற்றும் ஆர்க்டிக் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு அலெக்ஸி செகுன்கோ, ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சர் திரு விட்டாலி சவேலிவ் ஆகியோரை  அவர் சந்திக்க உள்ளார்.

கிழக்குப் பொருளாதார  அமைப்பில் உரையாற்றிய அமைச்சர் திரு சோனாவால், "பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இந்தியா-ரஷ்யா உறவில் ஏற்பட்டுள்ள இந்தப் புதிய உத்வேகத்தைக் கருத்தில் கொண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரங்களான ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் மற்றும் இந்தியாவின் சென்னை ஆகியவற்றுக்கு இடையே   மாற்று வர்த்தகப் பாதையை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். எனது பயணம் மற்றும் ரஷ்யாவின் தலைமையுடனான சந்திப்புகளின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திபூர்வ வர்த்தக மற்றும் தளவாட ஒத்துழைப்பை வளர்ப்பது தவிர இந்த முக்கியமான முயற்சியில் நாம் முன்னேற்றம் காண முடியும் என்று நம்புகிறேன்என்றார்

கிழக்குப் பொருளாதார அமைப்பில் இந்தியா-ரஷ்யா வர்த்தக உரையாடலில் உரையாற்றும் திரு சோனாவால், இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற உத்திபூர்வ கூட்டாண்மைக்குள் நீடித் மற்றும் நிலைத்தன்மையை வளர்ப்பதில் வர்த்தகம், வர்த்தகம் மற்றும் வணிகத்தின் முக்கிய பங்கை எடுத்துரைப்பார். கிழக்குக் கடல்சார் வழித்தடம் குறித்த அமர்வில் இந்தியாவின் கப்பல் துறை அமைச்சர் உரையாற்றுவார். அதே நேரத்தில் வடக்குக் கடல் பாதையின் சாத்தியக்கூறுகளை ஆராய்வது மற்றும் வங்காள விரிகுடாவில் கப்பல்களில் சரக்குகளை மாற்றி இறக்கும்/ஏற்றும் மையத்தை நிறுவுவது உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரஷ்யக் கூட்டமைப்பின் மூத்த அமைச்சர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

 

கிழக்குப் பொருளாதார அமைப்பு, 2023-ன் கூட்டம் 2023 செப்டம்பர் 10-13 தேதிகளில் தூரக் கிழக்கு கூட்டாட்சிப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. ரஷ்யாவின் தூரக் கிழக்கின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்காகவும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காகவும், 2015 ஆம் ஆண்டில் ரஷ்யக் கூட்டமைப்பின் அதிபர் விளாடிமிர் புட்டின் உத்தரவின் மூலம் கிழக்குப் பொருளாதார அமைப்பு நிறுவப்பட்டது.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1956251

***

ANU/AP/SMB/AG



(Release ID: 1956300) Visitor Counter : 129