சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு பிரச்சாரம் 2.0: தூய்மையை நோக்கிய சுரங்க அமைச்சகத்தின் முன்னேற்றம்

Posted On: 08 SEP 2023 12:39PM by PIB Chennai

சிறப்பு பிரச்சாரம் 2.0 இன் ஒரு பகுதியாக, சுரங்க அமைச்சகமும் அதன் கள அமைப்புகளும் நவம்பர் 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை தூய்மைப் பணிகளை மேற்கொண்டன. அமைச்சகத்திற்கான பிரச்சாரத்தை 2022 அக்டோபர் 2-ஆம் தேதி புதுதில்லியில் சுரங்க  அமைச்சகத்தின் செயலாளர் தொடங்கி வைத்தார்.  116 தூய்மைப் பிரச்சாரங்களை செயல்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் 84 கள அலுவலகங்களை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.

மழைநீர் சேகரிப்பு, உரக்குழிகள், ஏரிகள் / குளங்களை சுத்தம் செய்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கழிவுகளை அகற்றுதல் ஆகியவற்றின் வடிவத்தில் "சுற்றுச்சூழலுக்கு திருப்பிக்  கொடுப்பது" என்பது அமைச்சகத்தால் நிர்ணயப்பட்ட இலக்காகும். சிறந்த நடைமுறைகளின் ஒரு பகுதியாக, சுரங்க அமைச்சகத்தின் அலுவலகங்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்   ஏற்படுத்தப்பட்டன. மண்புழு உரக்குழி திட்டங்களுக்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டன.

சிறப்பு பிரச்சாரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்த மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரல்காத் ஜோஷி, சுரங்க அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்ட துறை ரீதியான  உணவகத்தில் கழிவுகளை தரம்  பிரிக்க பரிந்துரைத்தார். சாஸ்திரி பவனின் துறை ரீதியான  உணவகங்களுக்கு கழிவுகளை தரம் பிரிப்பதற்கும், உரக்குழிகள் தயாரிக்க உயிரி கழிவுகளைப் பயன்படுத்துவதற்கும் இதேபோன்ற வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு ஒருங்கிணைப்பு அமைச்சகமான கல்வி அமைச்சகம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஐதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.ஐ.டி.ஐ.யும் ஒரு சிறந்த நடைமுறையாக அதன் விடுதி உணவகத்தில் கழிவுகளைப் பிரித்தெடுக்கத் தொடங்கியதுடன், உரம் தயாரிக்க உயிர்க் கழிவுகளையும் பயன்படுத்தியது. ஐதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.ஐ.டி.யில் உரக்குழி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பயன்படுத்தப்படாத நிலம், பயிற்சியாளர்கள் / ஊழியர்கள் / பொதுமக்களுக்கான திறந்தவெளி உடற்பயிற்சி கூடமாக மாற்றப்பட்டது.

சிறப்பு  பிரச்சாரம் 2.0 இன் ஒரு பகுதியாக, சுரங்க அமைச்சகம்,  நவம்பர் 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை சுமார் 2743 கோப்புகளை அகற்றி, மொத்தம் 34549 சதுர அடி இடத்தை சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை அகற்றியதன் மூலம் மொத்தம் ரூ.172,130,148 வருவாயை ஈட்டியுள்ளது.

ஒரு சிறந்த பணிச் சூழலை உருவாக்குவதற்காக அலுவலக இடம் நவீனமயமாக்கப்பட்டது. சுரங்க  அமைச்சகத்தின் நடைபாதைகள் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டன.

***

ANU/AD/BR/KPG

 


(Release ID: 1955566) Visitor Counter : 162