அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்திய இளைஞர்களுக்குப் பல புதிய வாய்ப்புகள் திறமைக்கு ஏற்ப வாழ்வாதாரங்களை வழங்குகின்றன; மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 06 SEP 2023 5:48PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெற்ற கேஏஎம்பி பிரதிபா உத்சவ் -2023 இல் உரையாற்றிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், சந்திரயான் -3 வெற்றிகரமாக ஏவப்பட்டது இந்திய மாணவர்களிடையே உலகளாவிய விருப்பங்களை தூண்டியுள்ளது என்று கூறினார். சந்திரயான் -3 ஐத் தொடர்ந்து ஆதித்யா எல் 1, சூரியனை ஆய்வு செய்வதற்கான முதல் விண்வெளி அடிப்படையிலான இந்தியாவின் திட்டமாகும். இன்னும் சில நாட்களில் இந்தியா டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க ஜி 20 உச்சி மாநாட்டை நடத்துகிறது, இவை அனைத்திற்கும் பெருமை நமது தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியையே சாரும் என்றும் கூறினார்.

 

“இந்தியாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குப் புதிய தொழில் மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகளைத் திறப்பதற்கான வாக்குறுதியுடன் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்புக்கு துணைபுரியும் புதிய தேசியக் கல்விக் கொள்கையையும் (என்இபி -2020) பிரதமர் மோடி கொண்டு வந்தார்,” என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

 

மேலும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், இந்த கல்வி நெகிழ்வுத்தன்மை மாணவர்களின் உள்ளார்ந்த கற்றல் மற்றும் உள்ளார்ந்த திறனைப் பொறுத்து வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு தொழில் வாய்ப்புகளைப் பெறுவது தொடர்பான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், மல்டிபிள் என்ட்ரி / எக்ஸிட் விருப்பத்தை வழங்குவது மதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த நுழைவு / வெளியேறும் விருப்பத்தை எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கும் தேர்வு செய்யலாம் என்றும், இது சில மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவைப் போலவே அவர்களுக்கு தொழில் நெகிழ்வுத்தன்மை மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்குகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

 

மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியைக் குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், முறையான வேலைகளைத் தவிர, ஸ்டார்ட் அப்கள், முத்ரா திட்டம், பிரதமர் ஸ்வநிதி என நாட்டின் இளைஞர்களுக்கு அரசாங்கத் துறைக்கு வெளியே லட்சக்கணக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டினார்.

 

ஜூன் 2020 இல் பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சியால் விண்வெளி ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை வெறும் 04 என்பதில் இருந்து 150 ஸ்டார்ட்அப்களாக உயர்ந்துள்ளது, அவற்றில் பெரும்பாலானவை அறிவியல் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களால் வழிநடத்தப்படுகின்றன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

 

சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆரின் ஒரு வாரம் ஒரு ஆய்வகத் திட்டம் 2023 செப்டம்பர் 11 முதல் 16 வரை இயங்கும்,  அப்போது சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆர் அமைப்புகளை பொதுமக்கள் பார்வையிடலாம்.

 

வெளியீட்டு ஐடி; 1955213

AD/BS/KRS

*********


(Release ID: 1955307) Visitor Counter : 122