நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
மசூர் (பயறு) கையிருப்பை உடனடியாக வெளியிட மத்திய அரசு உத்தரவு
Posted On:
06 SEP 2023 4:40PM by PIB Chennai
மசூர் எனப்படும் மைசூர் பருப்பு கையிருப்பு விவரத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மத்திய அரசின் நுகர்வோர் நலத் துறை, அறிவுறுத்தியுள்ளது. அனைத்துப் பங்குதாரர்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் துறையால் நிர்வகிக்கப்படும் கையிருப்பு நிலை இணையதளத்தில் (https://fcainfoweb.nic.in/psp) தங்கள் மசூர் கையிருப்பு அளவுகளை கட்டாயமாக வெளியிட வேண்டும். வெளியிடப்படாத இருப்பு கண்டறியப்பட்டால், அது பதுக்கலாகக் கருதப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வாராந்திர விலை மறுஆய்வுக் கூட்டத்தில் நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் திரு ரோஹித் குமார் சிங், பருப்பு கொள்முதலை விரிவுபடுத்துமாறு துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். குறைந்தபட்ச ஆதார விலையில் கிடைக்கக்கூடிய இருப்புகளை வாங்குவதே இதன் நோக்கமாகும். இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு ஆகியவை இறக்குமதி செய்யப்பட்ட பயறுகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை இடைநிறுத்த வேண்டிய நேரத்தில், சில விநியோகிப்பாளர்களிடமிருந்து அதிகப்படியான ஏலங்கள் பெறப்பட்டன.
கனடாவிலிருந்து பயறு இறக்குமதி மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து துவரம்பருப்பு இறக்குமதி அதிகரிக்கும் நேரத்தில், சில நிறுவனங்கள் நுகர்வோர் மற்றும் நாட்டின் நலன்களுக்கு எதிராக சந்தையை கையாள முயற்சிக்கின்றன என்று நுகர்வோர் விவகாரங்களின் செயலாளர் கூறினார். இந்த நிகழ்வுகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது, மேலும் பண்டிகைக் காலங்களில் அனைத்து பருப்பு வகைகளும் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக கையிருப்பை சந்தைக்கு கொண்டு வர கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
***
AD/ANU/SMB/RS/KRS
(Release ID: 1955282)
Visitor Counter : 150