உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பத்ம விருதுகள்-2024 க்கான பரிந்துரைகளை 2023 செப்டம்பர் 15 வரை அனுப்பலாம்

Posted On: 06 SEP 2023 11:20AM by PIB Chennai

குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்களை ஆன்லைன் வாயிலாக பரிந்துரைப்பதற்கான விண்ணப்பப் பதிவு மே 1, 2023 அன்று தொடங்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15 ஆம் தேதியாகும்பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள்  ராஷ்டிரிய புரஸ்கார் இணையதளத்தில் https://awards.gov.in  ஆன்லைனில் பெறப்படும்.

பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதுகளில் ஒன்றாகும். 1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், மக்கள் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்ற அனைத்து துறைகள் / துறைகளில் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடின்றி அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு தகுதியுடையவர்கள் ஆவர். மருத்துவர்கள் மற்றும் அறிவியலாளர்களைத் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பத்ம விருதுகளுக்கு தகுதியற்றவர்கள்.

 

பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்களை அனைத்து மக்களும் பரிந்துரைக்கலாம். விருது பெற விரும்புவோர் தங்களுக்கு தாங்களே சுயமான பரிந்துரைகளையும் அனுப்பலாம். சமூகத்தில் நலிந்த பிரிவினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமூகத்திற்கு தன்னலமற்ற சேவை செய்யும் நபர்களில் உண்மையிலேயே அங்கீகரிக்கப்பட வேண்டிய திறமையான நபர்களை அடையாளம் காண ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.

பரிந்துரைகள், ராஷ்டிரிய புரஸ்கார் போர்ட்டலில் https://awards.gov.in உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தொடர்புடைய விவரங்களையும் கொண்டிருக்க வேண்டும், அதிகபட்சம் 800 வார்த்தைகளில் மேற்கோள் காட்டப்படுபவர் / அவரது துறை / துறையில் பரிந்துரைக்கப்பட்ட நபரின் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவையை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.

இது தொடர்பான விவரங்கள் உள்துறை அமைச்சகத்தின் https://mha.gov.in  இணையதளத்திலும், பத்ம விருதுகள் இணையதளத்திலும் https://padmaawards.gov.in 'விருதுகள் மற்றும் பதக்கங்கள்' என்ற தலைப்பின் கீழ் கிடைக்கின்றன. இந்த விருதுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகள் https://padmaawards.gov.in/AboutAwards.aspx இணைப்பில் உள்ளன.

***

AD/BS/KRS


(Release ID: 1955263) Visitor Counter : 260