கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
நமது கடலோர வலிமையின் மகத்தான ஆற்றலை சிறந்த எதிர்காலத்திற்காக பயன்படுத்த வேண்டும்: திரு ஸ்ரீபத் நாயக்
Posted On:
05 SEP 2023 5:30PM by PIB Chennai
உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாடு 2023 (ஜி.எம்.ஐ.எஸ் -23) க்கு முன்னோட்டமாக இந்திய துறைமுக ரயில் மற்றும் ரோப்வே நிறுவனத்தின் (ஐ.பி.ஆர்.சி.எல்) 2வது நிகழ்வில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் நாயக் இன்று மெய்நிகர் முறையில் உரையாற்றினார்.
அப்போது பேசிய திரு ஸ்ரீபத் நாயக், “வரவிருக்கும் உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாடு 2023 ஒரு திருப்புமுனை தருணத்தைக் குறிக்கிறது, இது வணிகங்கள் ஒன்றிணைவதற்கும், ஒத்துழைப்பதற்கும், வணிகம் மற்றும் அறிவு வளர்ச்சியை நோக்கி ஒரு பாதையை வகுப்பதற்கும் இணையற்ற தளத்தை வழங்குகிறது” என்று கூறினார்.
ஜி.எம்.ஐ.எஸ்-23 இன் வளர்ச்சி வாய்ப்புகளை விவரித்த பிரதமர், நமது கடலோர வலிமையின் மகத்தான ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி இன்னும் சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்க வேண்டும் என்று கூறியதை திரு.ஸ்ரீபத் நாயக் நினைவு கூர்ந்தார். நமது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உத்வேகமூட்டும் பார்வையை நிறைவேற்றுவதற்கான ஒரு முயற்சி இந்த உச்சிமாநாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய ஸ்ரீபத் நாயக், “ஐ.பி.ஆர்.சி.எல் இன் முக்கிய பங்குதாரர்கள் மற்றும் வணிக கூட்டாளர்கள் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி தீவிரமாக பங்கேற்கவும், சர்வதேச அரங்கில் தங்கள் வணிகங்களை வெளிப்படுத்த கண்காட்சியாளராக சேர வேண்டும்,” என்று அழைப்பு விடுத்தார். ஜி.எம்.ஐ.எஸ் 23 இல் அவர்களின் இருப்பு கடல்சார் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பில் கூட்டாண்மை மற்றும் கண்டுபிடிப்புகளில் செழித்து வளரும் ஒரு துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பாக இருக்கும்.
இப்பெரும் நிகழ்வில் பல்வேறு வணிக கூட்டாளிகள் / முகவர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஐ.பி.ஆர்.சி.எல் அதிகாரிகள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். ஐ.ஜி.பி.எல் நிர்வாக இயக்குனர் திரு சுனில் முகுந்தனும் மெய்நிகர் நிகழ்வில் கலந்து கொண்டார்.
***
AD/BS/KRS
(Release ID: 1954946)
Visitor Counter : 142