ஆயுஷ்
azadi ka amrit mahotsav

உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ உலகளாவிய உச்சிமாநாடு 2023 இன் முடிவை அடிக்கோடிட்டுக் காட்டும் 'குஜராத் பிரகடனம்'

Posted On: 04 SEP 2023 12:47PM by PIB Chennai

அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை அடைவதற்கான பாரம்பரிய மருத்துவத்தின் உலகளாவிய அர்ப்பணிப்பு மற்றும் திறனை 'குஜராத் பிரகடனம்' மீண்டும் உறுதிப்படுத்துகிறது

உலக சுகாதார அமைப்பு-ஜி.சி.டி.எம்-ஐ  நடத்தும் நாடு என்ற வகையில் இந்தியா, உறுப்பு நாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உச்சிமாநாட்டின் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் உலக சுகாதார அமைப்பின் திறன்களை அதிகரிக்கும்.

உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவம் உலகளாவிய உச்சி மாநாடு 2023 இன் முடிவு ஆவணத்தை "குஜராத் பிரகடனம்" என்ற வடிவில் உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ) வெளியிட்டுள்ளது. இந்த பிரகடனம் உள்நாட்டு அறிவு, பல்லுயிர் மற்றும் பாரம்பரிய, துணை மருத்துவம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான உலகளாவிய கடமைகளை மீண்டும் உறுதிப்படுத்தியது. அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கான முழுமையான, சூழல் சார்ந்த, சிக்கலான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அணுகு முறைகளை நன்கு புரிந்துகொள்வதற்கும், மதிப்பிடுவதற்கும், பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவதற்கும் அதிதீவிர விஞ்ஞான முறைகளின் பயன்பாடு தேவை என்பதை உலக சுகாதார அமைப்பு அடிக்கோடிட்டுக் காட்டியது.

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை நடத்தும் நாடாக, உச்சிமாநாட்டின் செயல்திட்டம் மற்றும் பிற தொடர்புடைய முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதில் உறுப்பு நாடுகள் மற்றும் பங்குதாரர்களுக்கு ஆதரவளிக்கும் உலக சுகாதார அமைப்பின் திறன்களை அதிகரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இது மீண்டும் வலியுறுத்துகிறது.

குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற இரண்டு நாள் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ உலகளாவிய உச்சி மாநாடு 2023 இன் செயல் திட்ட முன்மொழிவுகள் உச்சிமாநாட்டில் வழங்கப்பட்ட சான்றுகள், விவாதங்கள் மற்றும் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டவை. மக்கள் மற்றும் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, புவி மண்டலம், ஆராய்ச்சி மற்றும் சான்றுகள், உலகளாவிய சுகாதார பாதுகாப்பு, ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் சுகாதார அமைப்புகள், தரவு மற்றும் வழக்கமான தகவல் அமைப்புகள், டிஜிட்டல் சுகாதார எல்லைகள், பல்லுயிர் மற்றும் நிலைத்தன்மை, மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் நெறிமுறைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பேசுகையில், "பாரம்பரிய மருத்துவ முறை குறித்த நமது பண்டைய அறிவை மேம்படுத்துவதற்கான நமது  பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டிற்கு குஜராத் பிரகடனம் ஒரு சான்றாகும். கூட்டு முயற்சிகள் மற்றும் நிலையான நடைமுறைகள் மூலம், எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்,” என்றார்.

உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவம் உலகளாவிய உச்சி மாநாட்டின் போது உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், "குஜராத் பிரகடனம்" பாரம்பரிய மருத்துவத்தின் திறனை அறிவியலின் கண்ணோட்டத்தில் பயன்படுத்த ஒரு ஊக்கியாக செயல்படும் என்றும், தேசிய சுகாதார அமைப்புகளில் பாரம்பரிய மருந்துகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தும் என்றும் பாரம்பரிய மருத்துவத்தின் சக்தியைத் திறக்க உதவும் என்றும் கூறியிருந்தார்.

உலகளாவிய சுகாதார பாதுகாப்பு (யு.எச்.சி) மற்றும் அனைத்து சுகாதாரம் தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குகள் (எஸ்.டி.ஜி) ஆகியவற்றின் குறிக்கோளுக்கு ஆதரவாக ஆதார அடிப்படையிலான டி.சி.ஐ.எம் (பாரம்பரிய ஒருங்கிணைந்த மருத்துவம்) தலையீடுகள் மற்றும் அணுகுமுறைகளை மேலும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அதிகரிப்பது குறித்து குஜராத் பிரகடனம் பேசுகிறது. உலகளாவிய சுகாதாரத்தில் டி.சி.ஐ.எம் இன் ஆதார அடிப்படையிலான நன்மைகளை அதிகரிக்க, உலக சுகாதார அமைப்பின் ஜி.சி.டி.எம் மூலம் உலகளாவிய உச்சி மாநாட்டில் நிரூபிக்கப்பட்ட பல பிராந்திய, பல்துறை மற்றும் பல பங்குதாரர் ஒத்துழைப்புகளின் பங்கை இது கூறுகிறது.

சான்று அடிப்படையிலான தேசிய சுகாதார கொள்கைகள் மிக உயர்தரமான ஆராய்ச்சியின் அடிப்படையிலான முறைகளுக்கு ஆதரவு. விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட டி.சி.ஐ.எம் தயாரிப்புகள் மற்றும் நடைமுறைகளின் உற்பத்தி, ஒழுங்குமுறை மற்றும் முறையான பயன்பாட்டை விரைவுபடுத்துதல். வழக்கமான சுகாதார தகவல் அமைப்புகளுக்குள் தரப்படுத்தப்பட்ட வழியில் டி.சி.ஐ.எம் குறித்த சான்றுகள் மற்றும் தரவு சேகரிப்பை ஒருங்கிணைக்க உதவும் உலக சுகாதார அமைப்பின் நோய்களின் சர்வதேச வகைப்பாட்டின் (ஐ.சி.டி -11) விரிவாக்கப்பட்ட மற்றும் விரைவான பயன்பாடு உட்பட தரப்படுத்தப்பட்ட டி.சி.ஐ.எம் ஆவணப்படுத்தலை ஊக்குவிக்கும் மேம்பட்ட கொள்கைகள். உலக சுகாதார அமைப்பின் ஐ.சி.டி-11 குறியீட்டின் அடிப்படையில் தரப்படுத்தப்பட்ட தரவு சேகரிப்பு மற்றும் கண்காணிப்பை வழக்கமாக மேற்கொள்ளும் டி.சி.ஐ.எம் பரிந்துரை மருத்துவ மையங்களின் உலகளாவிய கட்டமைப்பை நிறுவுதல்.

மக்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்விற்காக டி.சி.ஐ.எம் இல் டிஜிட்டல் சுகாதார வளங்களை மேம்படுத்த டிஜிட்டல் சுகாதார தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) ஆகியவற்றின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை எவ்வாறு பொருத்தமாகச் செயல்படுத்துவது என்பது உச்சிமாநாட்டின் சிறப்பம்சமாகும்.

பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கும், மீட்டெடுப்பதற்கும், நிலையான முறையில் நிர்வகிப்பதற்கும், பல்லுயிர் வளங்கள், தொடர்புடைய மரபணு பொருட்கள் மற்றும் பாரம்பரிய அறிவை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளின் நியாயமான மற்றும் சமமான பகிர்வை உறுதி செய்வதற்கும் அனைத்து மட்டங்களிலும் நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அது குறிப்பிடுகிறது. பாரம்பரிய பழங்குடியின மக்களின் உரிமைகள் தொடர்பான ஐ.நா பிரகடனத்தில் வழங்கப்பட்டுள்ளவாறு, பழங்குடி மக்களின் உரிமைகளை முழுமையாக அங்கீகரித்தல், மதித்தல் மற்றும் பாதுகாத்தல். டி.சி.ஐ.எம் ஆராய்ச்சி மற்றும் நடைமுறையில் நெறிமுறை முறைகள் மற்றும் செயல்முறைகளை பின்பற்றுதல்.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இணைந்து நடத்திய பாரம்பரிய மருத்துவம் குறித்த முதல் உலகளாவிய உச்சி மாநாடு 2023 ஆகஸ்ட் 17 முதல் 18 வரை குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்றது.

---

ANU/SM/BS/KPG


(Release ID: 1954646) Visitor Counter : 344