உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, ' என் மண் என் தேசம் ' பிரச்சாரத்தின் கீழ் அமிர்த கலச யாத்திரையை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.

Posted On: 01 SEP 2023 6:52PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா,  ' என் மண் என் தேசம்'  பிரச்சாரத்தின் கீழ் அமிர்த கலச யாத்திரையை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், வெளியுறவுத் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்டப் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய நிகழ்வு ஒரு மாலை நேரம் போன்றது என்று திரு அமித் ஷா தனது உரையில் கூறினார். வரவிருக்கும்  ஆகஸ்ட் 15, 2047 க்குள் உலகளவில் ஒவ்வொரு துறையிலும் இந்தியாவை முன்னணியில் வைத்திருக்கும் என்று அவர் கூறினார். நமது சுதந்திர போராட்ட வீரர்கள் கனவு கண்டபடி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா உருவாக்கப்படும் என்று திரு. அமித் ஷா கூறினார். கடந்த 75 ஆண்டுகளில், இந்தியா பல சாதனைகளைப் பெற்றுள்ளது, ஆனால் அவை போதுமானதாக இல்லை என்று அவர் மேலும் கூறினார். நீண்ட கால அடிமைத்தனத்திற்கும் கோடிக்கணக்கானவர்களின் தியாகங்களுக்கும் பிறகு, நாம் சுதந்திரம் பெற்றுள்ளோம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு இந்தியரும் ஒன்றிணைந்து ஒரு பெரிய இந்தியாவை உருவாக்க உதவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று திரு ஷா கூறினார்.

நாம் இப்போது சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோம், இதற்காக, கோடிக் கணக்கானவர்கள் தியாகம் செய்துள்ளனர் என்று அவர் கூறினார். 1857 முதல் 1947 வரை, 90 ஆண்டுகள், சுதந்திரத்திற்கான நீண்ட போராட்டம் நடைபெற்றது, எண்ணற்ற அறியப்பட்ட மற்றும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் இந்த நோக்கத்திற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர். இதயத்தில் தேசபக்தி நிறைந்த பிரதமர் நரேந்திர மோடி போன்ற ஒருவர் மட்டுமே இந்த "சங்கல்ப் சே சித்தி" பயணத்தைத் தொடங்குவதை கற்பனை செய்திருக்க முடியும்,  ஒவ்வொரு தனிநபரும், குடும்பமும், குடிமகனும், குழந்தையும் சிறந்த இந்தியாவை உருவாக்கும் எண்ணத்துடன் உணர்வுப்பூர்வமாக இணைக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் பின்னால் உள்ள யோசனை என்று திரு ஷா கூறினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த முன்முயற்சியில் பல திட்டங்களை ஒருங்கிணைத்துள்ளார் என்றும், ஒவ்வொரு இந்தியரும் இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார் என்றும் திரு அமித் ஷா கூறினார். நாட்டுக்கு தன்னை மீண்டும் அர்ப்பணிப்பதை நோக்கமாகக் கொண்ட 5 நிகழ்ச்சிகளால் ஒரு புதிய தொடர் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதன் கீழ் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் கல்வெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன, நாட்டின் கோடிக்கணக்கான குடிமக்கள் இந்தியாவை மகத்தானதாக மாற்ற வழிவகுக்கும் உறுதிமொழியை எடுத்துள்ளனர்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின்போது, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது முழு நாட்டிலும் தேசபக்தி உணர்வை மீண்டும் எழுப்பியுள்ளது என்றும், இந்தத் திட்டங்கள் என் மண் என் தேசம்  திட்டத்துடன் முடிவடையும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

 பிரதமர் திரு. நரேந்திர மோடியின் 'வீடு தோறும் மூவண்ணக்கொடி இயக்கம்' அழைப்புக்குப் பிறகு நாடு முழுவதும் 23 கோடி வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்கள் மூவரண்ணக் கொடியால் அழகுபடுத்தப்பட்டன என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை மதித்து முழு நாடும் இத்திட்டத்தில் இணைந்தது என்றும், இந்த தேசபக்தி உணர்வின் விளைவாக சமீபத்தில் நமது சந்திரயான் நிலவில் சிவசக்தி முனையை அடைந்தது என்றும், இது நாட்டு மக்கள் அனைவருக்கும் மிகவும் பெருமையான தருணம் என்றும் திரு ஷா கூறினார். ஒவ்வொரு வீட்டிலும் மூவரண்ணக் கொடி பிரச்சாரத்தால் நாட்டின் ஒவ்வொரு நபரின் மனதிலும் பெருமை உணர்வு எழுந்துள்ளது என்று அவர் கூறினார்.

என் மண் என் தேசம் என்பது வெறும் திட்டம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதற்கான ஒரு ஊடகம் என்று உள்துறை அமைச்சர் கூறினார். இந்தத் திட்டம் நாட்டை சிறந்ததாக மாற்றும் செயல்முறையின் ஒரு பகுதியாக மாறுவதற்கான ஒரு ஊடகமாக மாறும் என்றும், 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய தலைமுறை ஒரு சிறந்த இந்தியாவை வழிநடத்தும்போது, முந்தைய தலைமுறை மிகவும் வலுவான இந்தியாவை உருவாக்க உதவியது என்ற திருப்தி அவர்கள் மனதில் இருக்கும் என்றும் திரு ஷா கூறினார்.

*******

(வெளியீட்டு ஐடி: 1954149)

 

AD/ANU/PKV/KRS



(Release ID: 1954242) Visitor Counter : 139