நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான 2022-23 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் நாடாளுமன்றப் போட்டியின் பரிசளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது

Posted On: 31 AUG 2023 10:52AM by PIB Chennai

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான 2022-23-ஆம் ஆண்டுக்கான 33-ஆவது தேசிய இளைஞர் நாடாளுமன்றப் போட்டியின் பரிசு வழங்கும் விழா, தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் நாளை (செப்டம்பர் 1-ஆம் தேதி) நடைபெறவுள்ளது.

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத்துறைகளின் இணை அமைச்சருமான திரு அர்ஜூன் ராம் மேக்வால்  விழாவுக்குத் தலைமை வகித்து பரிசுகளை வழங்குவார். இந்த நிகழ்வில், கேந்திரிய வித்யாலயாக்களுக்கான 2022-23 தேசிய இளைஞர் நாடாளுமன்றப் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் உள்ள கேந்திரிய வித்யாலயா எண் 1 பள்ளி மாணவர்கள் தங்கள் “இளைஞர் நாடாளுமன்றம்” அமர்வின் செயல்திறனை மீண்டும் வெளிப்படுத்துவார்கள்.

நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், பல ஆண்டுகளாக கேந்திரிய வித்யாலயாக்களுக்கான இளைஞர் நாடாளுமன்றப் போட்டிகளை நடத்தி வருகிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான இளைஞர் நாடாளுமன்றப் போட்டித் திட்டத்தின் கீழ்,  2022-23 ஆம் ஆண்டின் 33-வது போட்டி, கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் 25 மண்டலங்களில் உள்ள 150 பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்டது.

இளைய தலைமுறையினரிடையே சுய ஒழுக்கம், மாறுபட்ட கருத்துக்களை சகித்துக் கொள்ளுதல், நியாயமான கருத்துக்களை வெளிப்படுத்துதல் மற்றும் ஜனநாயக வாழ்க்கைமுறையின் பிற நற்பண்புகளை வளர்ப்பதை இளைஞர் நாடாளுமன்றத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தின் நடைமுறைகள், கலந்துரையாடல் மற்றும் விவாத நுட்பங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களிடம் தன்னம்பிக்கை, தலைமைத்துவத்தின் தரம் மற்றும் திறமையான பேச்சாற்றலின் கலை மற்றும் திறனை இந்த நிகழ்ச்சி மேம்படுத்துகிறது.

33-வது போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்ததற்காக “நேரு சுழல் கோப்பை” மற்றும் கோப்பை, மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் உள்ள கேந்திரிய வித்யாலயா எண் 1  பள்ளிக்கு (ஜபல்பூர் மண்டலம், தெற்கு மண்டலம்) வழங்கப்படும். மேலும், இப்போட்டியில் மண்டல அளவில் முதலிடம் பெற்ற 4 பள்ளிகளுக்கு மண்டல வெற்றிக் கோப்பைகள் வழங்கப்படும். இது தவிர, போட்டியில் மண்டல அளவில் முதலிடம் பெற்ற 20 பள்ளிகளுக்கு மண்டல வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.

***

AD/ANU/BAGYA/KPG

 


(Release ID: 1953700) Visitor Counter : 125