குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
கடந்த 9 ஆண்டுகளில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கருவிப் பட்டறை மற்றும் பயிற்சி மையங்கள் 16 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளன, 3 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடைந்துள்ளன – திரு நாராயண் ரானே
Posted On:
30 AUG 2023 7:16PM by PIB Chennai
தேசிய சிறுதொழில் தினத்தை முன்னிட்டு, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு.நாராயண் ரானே தனது சமூக ஊடக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கடந்த 9 ஆண்டுகளில் 16 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, நாடு முழுவதும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் அமைச்சகத்தால் நடத்தப்படும் 18 கருவிப் பட்டறைகள் மற்றும் தொழில்நுட்ப மையங்கள் மூலம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்..
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கருவிப் பட்டறைகள் மற்றும் தொழில்நுட்ப மையங்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியின், தற்சார்பு இந்தியா கனவை நனவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருவதாக திரு ரானே கூறினார். இந்த கருவிப் பட்டறைகள் மற்றும் தொழில்நுட்ப மையங்கள் அதிநவீன தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் படிப்படியான ஆதரவை வழங்குகின்றன.
விளையாட்டுப் பொருட்கள், பிளாஸ்டிக், வாகன உற்பத்தி, காலணிகள், கண்ணாடி, வாசனை திரவியம், உலோகத் தொழிற்சாலை, மின்னணு மற்றும் விண்வெளி துறை தொடர்பான தொழில்களில் பயன்படுத்தப்படும் நடுத்தர மற்றும் சிறிய அளவிலான உபகரணங்களை சர்வதேச தரத்திற்கு ஏற்ப இந்த கருவிப் பட்டறைகள் வடிவமைத்து தயாரிக்கின்றன என்று திரு ரானே கூறினார். சமீபத்தில் தொடங்கப்பட்ட சந்திரயான் -3 திட்டத்தில், புவனேஸ்வர் கருவிப் பட்டறை 437 வகையான சுமார் 54,000 ஏரோ-ஸ்பேஸ் பாகங்களை தயாரித்தது. கொரோனா பெருந்தொற்றின் கடினமான காலங்களில் நோய்த் தொற்று தடுப்பு உடைகள், கிருமி நாசினி இயந்திரங்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் ஆகிய உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதிலும் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் கருவி பட்டறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரிவுகளை மேலும் வலுப்படுத்த மேலும் 15 தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படுவதாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தனது சமூக ஊடக எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
*****
ANU/AD/IR/KPG
(Release ID: 1953598)
Visitor Counter : 153