ரெயில்வே அமைச்சகம்

கொல்கத்தா மெட்ரோ ரயில்வே லண்டன், மாஸ்கோ, பெர்லின், முனிச் மற்றும் இஸ்தான்புல் மெட்ரோவின் எலைட் கிளப்பில் உறுப்பினராக உள்ளது

Posted On: 30 AUG 2023 4:52PM by PIB Chennai

அக்டோபர் 24, 1984 அன்று இந்திய ரயில்வேயால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் மெட்ரோவான கொல்கத்தா மெட்ரோ ரயில் கிட்டத்தட்ட 40 நீண்ட ஆண்டுகளாக ஜாய் நகரமான கொல்கத்தாவின் உயிர்நாடியாக செயல்பட்டு வருகிறது.

கொல்கத்தா மெட்ரோ இரயில்வேயில், மெட்ரோ ரேக்கிற்கு மின்சாரம், ஸ்டீல் மூன்றாவது தண்டவாளம் மூலம் 750 வோல்ட் டி.சி.யில் ரோலிங் ஸ்டாக்கிற்கு வழங்கப்படுகிறது. மெட்ரோ ரேக்கில் பொருத்தப்பட்ட எஃகால் செய்யப்பட்ட மூன்றாவது தண்டவாளம் கரண்ட் கலெக்டர் (டி.ஆர்.சி.சி) மூன்றாவது தண்டவாளத்திலிருந்து மின்னோட்டத்தை சேகரிக்கிறது. கொல்கத்தா மெட்ரோ ரயில் கடந்த 40 ஆண்டுகளாக எஃகு மூன்றாவது தண்டவாளத்தைப் பயன்படுத்துகிறது. கொல்கத்தா  மெட்ரோ ரயில்வே இப்போது கட்டுமானத்திற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து வழித்தடங்களிலும் கலப்பு அலுமினியம் மூன்றாவது தண்டவாளத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த மெட்ரோ ரயில்வே மூலம்கொல்கத்தா லண்டன், மாஸ்கோ, பெர்லின், முனிச் மற்றும் இஸ்தான்புல் மெட்ரோவின் எலைட் கிளப்பின் உறுப்பினராக மாறும், அவர்கள் எஃகு மூன்றாவது தண்டவாளத்திலிருந்து அலுமினியம் மூன்றாவது தண்டவாளத்திற்கு மாறியுள்ளனர்.

இது தொடர்பாக, மெட்ரோ ரயில்வே கொல்கத்தா தற்போதுள்ள மூன்றாவது தண்டவாளத்தை மாற்றுவதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது, முதல் கட்டமாக டம்டம் முதல் ஷியாம்பஜார் வரையிலான பகுதியை உள்ளடக்கியது. இரண்டாம் கட்டமாக ஷியாம்பஜார் முதல் சென்ட்ரல் வரையிலும், ஜே.டி.பார்க் முதல் டோலிகஞ்ச் வரையிலும் பணிகள் மேற்கொள்ளப்படும். மூன்றாம் கட்டமாக, மகாநாயக் உத்தம் குமார் (டோலிகஞ்ச்) முதல் கவி சுபாஷ் (புதிய கரியா) வரையிலான பிரிவு எடுத்துக் கொள்ளப்படும்.   எனவே, மொத்தம் 35 கி.மீ மெயின் லைன் எஃகு மூன்றாவது தண்டவாளம் படிப்படியாக மாற்றப்படும்.

எஃகு மூன்றாவது தண்டவாளத்தைவிட அலுமினியம் கலப்பு மூன்றாவது தண்டவாளத்தின் வெளிப்படையான நன்மைகள் பின்வருமாறு:

எஃகு மூன்றாவது தண்டவாளத்தின் மின்தடை கலப்பு அலுமினியம் மூன்றாவது தண்டவாளத்தைவிட ஆறு மடங்கு அதிகமாக இருப்பதால் மின்தடை மின்னோட்ட இழப்பு குறைதல் மற்றும் மேம்பட்ட இழுவை மின்னழுத்த நிலை இருக்கும்.

அலுமினிய கலப்பு மூன்றாவது தண்டவாளத்தைப் பயன்படுத்துவதால் இழுவைத்திறன் அதிகரிக்கும்.

குறைக்கப்பட்ட மின்னழுத்த வீழ்ச்சி கொல்கத்தா மெட்ரோ ரயில்வேயில் உள்ள அதே ரேக் மூலம் விரைவான முடுக்கத்தை அடைய உதவும்.

குறைந்த பராமரிப்பு மற்றும் வாழ்க்கை சுழற்சி செலவு. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்றாவது தண்டவாளத்துக்கு வர்ணம் பூச வேண்டும் என்ற தேவை இனி தேவைப்படாது. மூன்றாவது தண்டவாள பரிமாணத்தை அளவிடும் அதிர்வெண் கணிசமாகக் குறையக்கூடும். துருப்பிடித்தல் போன்றவற்றால் சேதம் ஏற்பட வாய்ப்பில்லை.

கலப்பு அலுமினியம் மூன்றாவது தண்டவாளத்தைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்ட ஆற்றல் சேமிப்பு ஆண்டுக்கு சுமார் 6.7 மில்லியன் யூனிட்களாக இருக்கலாம்.

----

ANU/AD/PKV/KPG



(Release ID: 1953583) Visitor Counter : 104


Read this release in: English , Urdu , Hindi , Punjabi