பாதுகாப்பு அமைச்சகம்
இந்த ஆண்டு முதல் ஏழாம் வகுப்பு என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தில் தேசிய போர் நினைவிடம் 'நமது துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை' என்ற அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது
Posted On:
28 AUG 2023 5:31PM by PIB Chennai
தேசிய போர் நினைவிடம் - 'நமது துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை' என்ற அத்தியாயம் இந்த ஆண்டு முதல் ஏழாம் வகுப்பின் என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம், கல்வி அமைச்சகம் ஆகியவை இணைந்து முன்னெடுத்துள்ள இந்த முயற்சியின் நோக்கம், பள்ளி மாணவர்களிடையே தேசபக்தி, கடமையுணர்வு மற்றும் துணிச்சல் மற்றும் தியாகம் போன்ற அம்சங்களை வளர்ப்பதும், தேசத்தை கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதும் ஆகும்.
இந்த அத்தியாயம் தேசிய போர் நினைவிடத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருத்தை எடுத்துக்காட்டுகிறது, மேலும் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் சேவையில் பாதுகாப்புப் படைகளின் துணிச்சலான வீரர்கள் உயர்ந்த தியாகத்தையும் எடுத்துரைக்கிறது. அத்தியாயத்தில், இரண்டு நண்பர்கள் கடிதங்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள் மற்றும் துணிச்சலான வீரர்களின் தியாகங்களால் அவர்கள் அனுபவிக்கும் சுதந்திரத்திற்கான நன்றி உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நினைவிடத்தைப் பார்வையிடும்போது குழந்தைகளின் மனதிலும் இதயத்திலும் எழும் ஆழமான உணர்ச்சி தாக்கம் மற்றும் இணைப்பு, என்.சி.இ.ஆர்.டி ஆசிரியர்களால் ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் திரு. நரேந்திர மோடி பிப்ரவரி 25, 2019 அன்று புதுதில்லியில் தேசிய போர் நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் என்பது நினைவிருக்கலாம். இது மக்களிடையே தியாக உணர்வையும் தேசிய உணர்வையும் வளர்ப்பதற்காகவும், நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் அமைக்கப்பட்டது.
****
AD/ANU/IR/RS/KRS
(Release ID: 1952973)
(Release ID: 1953056)
Visitor Counter : 186