குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி
இடுகை இடப்பட்ட நாள்:
28 AUG 2023 4:43PM by PIB Chennai
ஓணம் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது மனப்பூர்வமான ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒற்றுமை, அறுவடை மற்றும் கலாச்சார செழுமையின் கொண்டாட்டமாக ஓணம் கொண்டாடப்படுகிறது. இது சமூகங்களை பாரம்பரியங்களின் தொகுப்பில் இணைக்கிறது.
மகாபலி மன்னரின் நினைவாக கொண்டாடப்படும் இது, கருணை, இரக்கம் மற்றும் தியாகத்தின் காலத்தால் அழியாத மதிப்புகளை நினைவூட்டுகிறது. நமது வேளாண் சமூகத்தின் அயராத முயற்சிகளை கௌரவிப்பதற்கும், இயற்கை அன்னையின் கொடைக்கு நன்றி தெரிவிப்பதற்குமான ஒரு பண்டிகையாகவும் இது உள்ளது.
ஓணம் பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்.
***
AD/ANU/IR/RS/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1953019)
வருகையாளர் எண்ணிக்கை : 214