பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோவா கடற்பகுதியில் உள்நாட்டு அஸ்ட்ரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த எல்.சி.ஏ தேஜஸ்

Posted On: 23 AUG 2023 5:08PM by PIB Chennai

தேஜஸ், இலகுரக போர் விமானம் (எல்.சி.) எல்.எஸ்.பி -7 ஆகஸ்ட் 23, 2023 அன்று கோவா கடற்பகுதியில்  கண்களுக்கு எட்டாத தொலைவில் அஸ்ட்ரா உள்நாட்டு ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது. சுமார் 20,000 அடி உயரத்தில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஏவுதல் சோதனையின்  அனைத்து நோக்கங்களும் பூர்த்தி செய்யப்பட்டு, துல்லியமாக இது அமைந்தது.

ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ஏடிஏ), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ),  இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) ஆகியவற்றின் சோதனை இயக்குநர் மற்றும் விஞ்ஞானிகள் மற்றும் இராணுவ விமான தகுதி மற்றும் சான்றிதழ் மையம் (சிமிலாக்) மற்றும் ஏரோநாட்டிகல் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் இயக்குநரகம் (டிஜி-ஏக்யூஏ) ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த சோதனையை கண்காணித்தனர். இந்த விமானத்தை சேஸ் தேஜஸ் இரட்டை இருக்கை விமானமும் கண்காணித்தது.

அதிநவீன பி.வி.ஆர் வான்-டு-வான் ஏவுகணையான அஸ்ட்ராசூப்பர்சோனிக் வான்வழி இலக்குகளை  அழிப்பதற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டி.ஆர்.டி.எல்), ஆராய்ச்சி மையம் இமாரத் (ஆர்.சி.) மற்றும் டி.ஆர்.டி.ஓவின் பிற ஆய்வகங்களால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்திலிருந்து உள்நாட்டு அஸ்ட்ரா பி.வி.ஆர் சோதனை தற்சார்பு இந்தியாவை  நோக்கிய ஒரு முக்கிய படியாகும்.

தேஜஸ்-எல்.சி.ஏவிலிருந்து ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியதற்காக .டி., டி.ஆர்.டி., சிமிலாக், டி.ஜி-.க்யூ. மற்றும் தொழில்துறையை பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். இந்த ஏவுதல் தேஜாஸின் போர் திறனை கணிசமாக அதிகரிக்கும். இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்களை சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்று அவர் கூறினார்.

பாதுகாப்புத் துறை செயலாளர் மற்றும் டி.ஆர்.டி. தலைவர் ஆகியோரும் வெற்றிகரமான சோதனைக்காக  குழுக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

AP/ANU/PKV/KRS


(Release ID: 1951560) Visitor Counter : 245