பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கார்வார் கடற்படைத் தளத்தில் 600 குடியிருப்புகளை கடற்படைத் தளபதி திறந்து வைத்தார்

Posted On: 22 AUG 2023 4:11PM by PIB Chennai

ஆகஸ்ட் 21, 23 அன்று கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் கார்வார் கடற்படைத் தளத்திற்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் போது, சி.என்.எஸ் அமடள்ளி மற்றும் அர்கா கடற்படைத் தளத்தில் தலா 600 குடியிருப்புகளைக் கொண்ட இரண்டு குடியிருப்பு கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார். கடற்படை வீரர்களின் குடும்பத்தினர்  மற்றும் பாதுகாப்பு சிவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஐ.ஜி.பி.சி தங்க மதிப்பீட்டிற்கு இணங்க 10 குடியிருப்பு கோபுரங்கள் நவீன வசதிகள், மேம்பட்ட உட்புறங்கள், நிலத்தோற்றம் மற்றும் வெளிப்புற சேவைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த உள்கட்டமைப்பு மேம்பாடுகள் சீபேர்ட் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகும், இது சுமார் 10,000 சீருடை அணிந்த மற்றும் சிவில் பணியாளர்கள் குடும்பங்களுடன் தங்க இந்தக் குடியிருப்புகள் கடப்பட்டுள்ளன.

தற்போது நடைபெற்று வரும் கட்டுமானம் ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த திட்டம் இந்திய அரசின் ' தற்சார்பு இந்தியா ' முன்முயற்சியுடன் பொருந்திப் போகிறது. இதில் பயன்படுத்தப்படும் 90% க்கும் அதிகமான பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.

உயர்தர பாதுகாப்பு உள்கட்டமைப்பை உருவாக்குவதில் சீபேர்ட் திட்ட முயற்சியை கடற்படைத் தளபதி  பாராட்டியதுடன், மீதமுள்ள பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தினார்.

----

ANU/AP/PKV/KPG


(Release ID: 1951180) Visitor Counter : 130


Read this release in: English , Urdu , Hindi , Telugu