நிலக்கரி அமைச்சகம்
பரவனாறு நதிப் பாதையை நிரந்தரமாக மாற்றும் பணியை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.ஐ.எல்.) நிறைவு செய்தது
प्रविष्टि तिथि:
22 AUG 2023 11:23AM by PIB Chennai
பரவனாறு ஆற்றுப் பாதையை நிரந்தரமாக மாற்றும் நீண்டகால மற்றும் முக்கியப் பணிகள் நேற்று (ஆகஸ்ட் 21, 2023 அன்று) நிறைவடைந்தன. மொத்தமுள்ள 12 கி.மீ. தூரத்தில் பெரும்பகுதியான 10.5 கி.மீ. பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய 1.5 கி.மீ பகுதிக்கான பணியை 2023 ஜூலை 26 முதல் என்.எல்.சி.ஐ.எல் எடுத்துக் கொண்டது.
பரவனாறு ஆற்றின் தற்காலிக சீரமைப்பு சுரங்கம்-2-ன் முகப்பிலிருந்து வெறும் 60 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த வடமேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் 100 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து மழைநீரைப் பரவனாறு வெளியேற்றுகிறது. இந்தப் பகுதியில் பல கிராமங்கள் உள்ளதால், தொடர் மழையின் போது வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பது மிக முக்கியமானதாக மாறியுள்ளது. சுரங்கங்களைச் சுற்றியுள்ள கிராமங்களைப் பாதுகாக்கும் பொறுப்பையும், கடமையையும் ஏற்றுக்கொண்ட என்.எல்.சி.ஐ.எல், பரவனாறு நீர் வழியை நிரந்தரமாக மாற்றும் முக்கியமான பணியை மேற்கொண்டது.
மொத்தம் 12 கி.மீ நீளத்திற்கு பரவனாறை நிரந்தரமாக திருப்புவதற்கான பகுதியின் தோராயமான பரப்பளவு 18 ஹெக்டேர் ஆகும். ஏற்கனவே, என்.எல்.சி.ஐ.எல்., சுரங்கங்கள் மூலமும், பரவனாற்றின் நீர் மூலமும், பல ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தற்போது பரவனாறு நீர்ப்பாதையை நிரந்தரமாக மாற்றுவதன் மூலம், கூடுதலாகப் பல ஏக்கர் விவசாய நிலத்தின் பாசனத்திற்குத் தண்ணீர் கிடைக்கும். மேலும், பரவனாற்றின் தொடர்ச்சியான நீராதாரம் நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்க உதவும்.
***
ANU/AD/SMB/AG
(रिलीज़ आईडी: 1950991)
आगंतुक पटल : 253