பாதுகாப்பு அமைச்சகம்
கர்வால் பகுதியில், 6,002 மீட்டர் உயரத்தில் உள்ள தெலு மலைச்சிகரத்திற்கான என்.சி.சி சிறுவர்களின், பயணம் புதுதில்லியிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது
Posted On:
21 AUG 2023 6:27PM by PIB Chennai
தேசிய மாணவர் படை (என்.சி.சி) சிறுவர்களின் மலையேற்றப் பயணத்தை இன்று (21.08.2023) புதுதில்லியிலிருந்து என்.சி.சி தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் திரு குர்பிர்பால் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இக்குழுவில் 5 அலுவலர்கள், 17 நிரந்தர பயிற்றுநர்கள் மற்றும் 26 தேசிய மாணவர் படை மாணவர்கள் (13 மாணவர்கள் மற்றும் 13 மாணவிகள்) இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு 2023 செப்டம்பர் முதல் வாரத்திற்குள் தெலு சிகரத்தை அடைய முயற்சி மேற்கொள்ளும்.
1970-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் மலையேற்றப் பயணத்தில் இது என்.சி.சி மாணவர்களின் 86-வது மலையேற்றப் பயணமாகும். 6,002 மீட்டர் (19,692 அடி) உயரமுள்ள தெலு சிகரம், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கர்வால் இமயமலைப் பகுதியின் கங்கோத்ரி மலைத்தொடரில் அமைந்துள்ளது.
இன்று பயணத்தைத் தொடங்கியுள்ள என்சிசி மாணவர்கள் வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்த என்.சி.சி தலைமை இயக்குநர், சவால்களை எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் செயல்படுமாறு அறிவுரை வழங்கினார். இளைஞர்களின் வளர்ச்சியில் என்சிசி முக்கிய பங்காற்றுவதுடன் அவர்கள் சாகச நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஏராளமான வாய்ப்புகளையும் வழங்கி வருவதாக என்.சி.சி தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் திரு குர்பிர்பால் சிங் தெரிவித்தார்.
-----
(Release ID 1950851)
ANU/AD/PLM/KPG/KRS
(Release ID: 1950882)
Visitor Counter : 130