கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

துறைமுக பாதுகாப்பு பணியகம் விரைவில் அமைக்கப்படும்: சர்பானந்தா சோனோவால்

Posted On: 19 AUG 2023 5:38PM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் , இந்தியாவின் கடல்சார் துறைக்கான தொலைநோக்கு பார்வையை வெளியிட்டார், குஜராத்தின் கெவாடியாவில் இன்று நடைபெற்ற 19 வது கடல்சார் மாநிலங்களின் மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் உருமாற்ற தாக்கத்துக்கு  உறுதியளிக்கும் முக்கிய முன்முயற்சிகளை விளக்கினார்.

நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக துறைமுக பாதுகாப்பு பணியகத்தை அரசாங்கம் விரைவில் ஒன்றிணைக்கும் என்று திரு சோனோவால் கூறினார்நிலையான வளர்ச்சியில் அரசின் கவனத்தை எடுத்துரைத்த அவர், மத்திய அரசு மற்றும் மாநில அரசு துறைமுகங்களில் ஹைட்ரஜன் மையங்களை உருவாக்குவதற்கான அமைச்சகத்தின் லட்சியத் திட்டம் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு துறைமுகங்களும் ஹைட்ரஜன் மையங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் என்று அவர் கூறினார். இதற்காக ரூ.1.68 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தீனதயாள் துறைமுக ஆணையம் ஏற்கனவே இறுதி செய்துள்ளது என்றார் அவர்.

 துறைமுகங்களுக்கான அமிர்த கால தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் துறைமுகத்தின் திறனை நான்கு மடங்காக உயர்த்துவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை  திரு சோனோவால் அறிவித்தார். அனைத்து முக்கிய துறைமுகங்களும் 2047 ஆம் ஆண்டிற்கான துறைமுக பெருந்திட்டத்தை  தயாரித்துள்ளன என்றும், மாநிலங்கள் 2047 ஆம் ஆண்டிற்கான துறைமுக பெருந்திட்டங்களை தயார் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்நாட்டின் மொத்த துறைமுக திறன் தற்போதுள்ள 2,600 மெட்ரிக் டன்னில் இருந்து 2047 ஆம் ஆண்டில் 10,000 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

 

முக்கியமான அறிவிக்கப்பட்ட துறைமுகங்கள், மாநில கடல்சார் வாரியங்கள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை மேம்படுத்த துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் ஏற்பாடு செய்த இரண்டு நாள் கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சில் கூட்டம் குஜராத்தின் கெவாடியாவில் இன்று நிறைவடைந்தது. கடல்சார் துறையை மேம்படுத்துவதற்காக 1997 ஆம் ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்ட உயர் ஆலோசனை அமைப்பாக எம்.எஸ்.டி.சி. முக்கிய மற்றும் பிற அறிவிக்கை செய்யப்பட்ட துறைமுகங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

கூட்டத்தில்  மத்திய இணை அமைச்சர்கள்  ஸ்ரீபாத் நாயக்சாந்தனு தாக்கூர், குஜராத் அரசின் வேளாண் துறை அமைச்சர் ராகவ்ஜி படேல், கர்நாடக மீன்வளம், துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு நீர்ப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு மங்கல் வைத்யா உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ..வேலு பேசுகையில், "19-வது எம்.எஸ்.டி.சி கூட்டத்தில் தமிழ்நாட்டின் தனித்துவமான கடலோரப் பார்வை பளிச்சிடுகிறது. இலங்கையுடனான வரலாறு மற்றும் வர்த்தகத்தை இணைக்கும் சர்வதேச பயணிகள் படகு சேவையை ஆவலுடன் எதிர்பார்ப்பதுடன், ஆதரவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். கடல்சார் திட்டமிடல், கடலோர சுற்றுலா மற்றும் கடலூர் கிரீன்ஃபீல்ட் துறைமுகம் ஆகியவற்றுக்கான எங்கள் அர்ப்பணிப்பு கடல்சார் வளர்ச்சிக்கான எங்கள் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது’’ என்று கூறினார்.

**********

 

ANU/SM/PKV/KRS



(Release ID: 1950482) Visitor Counter : 145