தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

'ஓவர்-தி-டாப் (ஓடிடி) தகவல்தொடர்பு சேவைகளுக்கான ஒழுங்குமுறை வழிமுறை மற்றும் ஓடிடி சேவைகளின் குறிப்பிடத்தக்கத் தடை' குறித்த ட்ராய் ஆலோசனை அறிக்கை மீதான கருத்துகள் / எதிர் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி நீட்டிப்பு

Posted On: 18 AUG 2023 3:09PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 07.07.2023 அன்று 'ஓவர்-தி-டாப் (ஓடிடி) தகவல் தொடர்பு சேவைகளுக்கான ஒழுங்குமுறை அமைப்பு மற்றும் ஓடிடி சேவைகளின் குறிப்பிடத்தக்க தடை குறித்த ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது. பங்குதாரர்களிடமிருந்து கோரப்பட்ட ஆலோசனை அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து எழுத்துப்பூர்வமான கருத்துக்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 04.08.2023 ஆகவும், எதிர் கருத்துகளை  பெறுவதற்கான கடைசி தேதி 18.08.2023 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற இதனுடன் தொடர்புடையவர்களின் வேண்டுகோளின் பேரில், எழுத்துப்பூர்வமான கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி முறையே 18.08.2023 மற்றும் 01.09.2023 வரை நீட்டிக்கப்பட்டது.

கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு, எழுத்துப்பூர்வமான கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை முறையே 01.09.2023 மற்றும் 15.09.2023 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் / எதிர் கருத்துகள் டிராய் ஆலோசகர் (நெட்வொர்க், ஸ்பெக்ட்ரம் மற்றும் உரிமம்) திரு அகிலேஷ் குமார் திரிவேதிக்கு advmn@trai.gov.in மின்னணு வடிவத்தில் அனுப்பப்படலாம். டிராய் ஆலோசகர் (நெட்வொர்க், ஸ்பெக்ட்ரம் & லைசென்ஸ்) அகிலேஷ் குமார் திரிவேதியை +91-11-23210481 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

***

ANU/SM/PKV/KPG

 



(Release ID: 1950166) Visitor Counter : 89