சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஜி 20 இந்திய தலைமைத்துவம் பதவி


ஜி 20 பிரதிநிதிகள் கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் உரையாற்றினார்

Posted On: 17 AUG 2023 11:01AM by PIB Chennai

ஜி 20 பிரதிநிதிகள் கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் உரையாற்றினார். இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் வசுதைவ குடும்பகம் - உலகம் ஒரு குடும்பம் என்ற தத்துவத்தையொட்டி உள்ளதாக அவர் கூறினார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வரை எவருக்கும் பாதுகாப்பு என்பது இல்லை என்று  தொற்று  நோய் நமக்கு கற்றுத்தந்துள்ளதாக  அவர் குறிப்பிட்டார்.

நாளை தொடங்கும் ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக, இன்று ஜி 20 பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் சுகாதார பணிக்குழுக்களில் நடைபெற்று வரும் முக்கியமான விவாதங்களை மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின்  கீழ் டிஜிட்டல் சுகாதார கண்டுபிடிப்புகள் மற்றும் தீர்வுகளின் வளர்ச்சி, பயன்பாடு குறித்து டாக்டர் பவார் குறிப்பிட்டார். "டிஜிட்டல் சுகாதாரத்திற்கான உலகளாவிய முன்முயற்சி ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கொண்டிருக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இது தடைகளை களைந்து தற்போதுள்ள நடைபெற்று வரும் டிஜிட்டல் சுகாதார முயற்சிகளை ஒரே அமைப்பின் கீழ் அணுக முடியும் என்பதை உறுதி செய்கிறது" என்றும் எடுத்துரைத்தார்.

 

----

SM/ANU/IR/RS/KPG

 



(Release ID: 1949832) Visitor Counter : 147