மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஜி 20-டிஜிட்டல் புதுமைக் கண்டுபிடிப்பு கூட்டமைப்பு உச்சி மாநாட்டை மத்திய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் பெங்களூருவில் நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 16 AUG 2023 6:37PM by PIB Chennai

பெங்களூருவில் நாளை முதல் நடைபெறும் ஜி 20-டிஜிட்டல் புதுமைக் கண்டுபிடிப்பு கூட்டமைப்பு உச்சி மாநாட்டை மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தொடங்கி வைக்கிறார்.

 

ஜி 20-இன் கீழ் நடைபெறும் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் சர்வதேச  வல்லுநர்கள் மற்றும் பிற ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் உள்பட டிஜிட்டல் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 'டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு', 'டிஜிட்டல் பொருளாதாரத்தில் பாதுகாப்பு', 'டிஜிட்டல் திறன்' போன்றவற்றில் கவனம் செலுத்தும் உள்ளிட்ட விவாதங்கள் இந்த உச்சிமாநாட்டில் இடம்பெறும்.

 

மாநாட்டின் போது பெருநிறுவனங்கள் மற்றும் புத்தொழில்  நிறுவனங்கள் அமைத்துள்ள புதுமைக் கண்டுபிடிப்பு கண்காட்சியையும் அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

 

ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பல்வேறு பிரிவுகளில் 30 புத்தொழில்  நிறுவனங்கள் கௌரவிக்கப்பட உள்ளன.

***

AD/ANU/IR/RS/KRS



(Release ID: 1949682) Visitor Counter : 131