தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலைத்தொடர்புத் துறையின் ஓய்வூதியதாரர்களுக்கான முகாம்களுக்கு ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 16 AUG 2023 6:09PM by PIB Chennai

ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதிலும், கேஒய்பி படிவத்தைப் புதுப்பிப்பதிலும் தொலைத்தொடர்பு ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, புதுதில்லி தொலைத்தொடர்புத் துறையின் தகவல் தொடர்புக் கணக்குகளின் முதன்மை கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக தில்லி முழுவதும் பல்வேறு இடங்களில் எம்டிஎன்எல் வளாகத்தில் தொலைத்தொடர்பு ஓய்வூதிய வசதி முகாம்களை நடத்தி வருகிறது.

இந்த முகாம்களில் ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு பிபிஓ புக், ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி பாஸ் புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் கேஒய்பி புதுப்பித்தல் மற்றும் 2023 ஜூன் மாதத்தில் காலாவதியான அல்லது ஜூலை 2023 முதல் செப்டம்பர் 2023 வரை காலாவதியாகும் ஆயுள் சான்றிதழை அந்த இடத்திலேயே சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த முகாம்கள் மூலம் தில்லி வட்டத்தைச் சேர்ந்த சுமார் 35,000 தொலைத்தொடர்பு ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பெறுவார்கள்.

***

ANU/AD/PKV/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1949680) வருகையாளர் எண்ணிக்கை : 219
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu